அஜித் சார் பண்ண இந்த விஷயத்தை யாரும் செய்ய மாட்டாங்க … மனம் திறந்த BESANT ரவி..!
Author: Vignesh24 December 2022, 10:16 am
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘வாரிசு’ திரைப்படமும் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘துணிவு’ திரைப்படமும் இந்த ஆண்டு பொங்கல் விருந்தாக வெளியாக உள்ளது. ‘வாரிசு’ திரைப்படமும் ‘துணிவு’ திரைப்படமும் இந்த இரு படங்களிலுமே, அதிக ரசிகர்களைக் கொண்ட கோலிவுட் டாப் ஹீரோக்கள் நடித்துள்ளதால் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் நடித்துள்ள ‘வாரிசு’ படத்தை முதல் முறையாக பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கி உள்ளதாலும், விஜய் முதல் முறையாக நேரடி தெலுங்கு படத்தில் நடித்துள்ளதாலும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அதே போல் இயக்குனர் எச்.வினோத் அஜித் நடித்துள்ள ‘துணிவு’ படத்தை, ஏற்கனவே அஜித்தை வைத்து இரண்டு ஹிட் படங்களை கொடுத்துள்ள மூன்றாவது முறையாக இயக்கி உள்ளதால், கண்டிப்பாக இந்த திரைப்படம் ஹார்டிக் வெற்றி பெறும் என அஜித் ரசிகர்கள் இந்த படத்தை வரவேற்க காத்திருக்கிறார்கள்.
இந்நிலையில், பிரபல சேனலில் ஒன்றில் விஜய் மற்றும் அஜித் ரசிகர்களின் பிரத்யேக நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. இதில், பல சினிமா பிரபலங்களும் கலந்து கொண்டு அஜித் மற்றும் விஜய் ஆகியோர் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்தனர். அதில் பெசன்ட் ரவி மற்றும் மகாநதி சங்கர் ஆகியோர் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டனர்.
நடிகர்கள் அஜித் மற்றும் விஜய் இருவரும் ஒருவருக்கு ஒருவர் குறித்து பேசிக் கொள்வார்களா என்ற கேள்விக்கு பதிலளித்த பெசன்ட் ரவி, “ரெண்டு பேருக்கும் உள்ள அவ்ளோ புரிதல் நிறையவே இருக்கிறது. ஷாலினி மேடமும் சங்கீதா மேடமும் பயங்கர க்ளோஸ் ஆனா, வெளிய இருந்து பார்க்கும் போது அப்படியே போயிட்டுருக்கு என்றும், ரசிகர்கள் ஒரு இமேஜ கொண்டு வந்துட்டாங்க” என தெரிவித்தார்.
அதே போல, நடிகர் விஜய்யுடன் நடித்த மறக்க முடியாத திரைப்பட காட்சி அல்லது வசனம் பற்றி பேசிய பெசன்ட் ரவி, “யார்றா இங்க தமிழ்ன்னு கூப்பிட்டு சட்டையை புடிச்சு நான் இழுத்துட்டு போவேன். அதுக்கு அப்புறம் அவரு துப்பாக்கியை எடுத்து சுடுற சீன் சூப்பரா இருக்கும்” என போக்கிரி படத்தை குறிப்பிட்டு பெசன்ட் ரவி தெரிவித்தார்.
அதே போல நடிகர் அஜித் குறித்து பேசி இருந்த பெசன்ட் ரவி, “நான் அஜித் சார்ன்னு கூப்பிட்டுட்டு இருந்தேன் ஆனா அவரு அஜித்ன்னு கூப்பிட சொல்லுவாரு என்றும், இவ்ளோ வளர்ந்தும் அஜித்ன்னு கூப்பிட சொல்லிருக்றாரு அது எல்லாம் எங்களுக்கு கெடச்ச கிஃப்ட்ன்னு தான் சொல்லணும் என நெகிழ்ச்சியுடம் தெரிவித்தார்.
ஒரு முறை அஜித் சார் கேரவனும், என் கேரவனும் பக்கத்துல பக்கத்துல நின்னுட்டு இருந்துது. அப்போ என் கேரவன்ல கரெண்ட் போயிருச்சு. அஜித் சார் கேரவன்ல கரெண்ட் இருந்துச்சு. என்னை அவரு கேரவன்ல கூப்பிட்டு அவரு சேர்ல உக்கார வெச்சு ரவிக்கு அங்கே மேக்கப் போடுங்கன்னு சொன்னாரு. அந்த டைம்ல டீ குடுத்தாரு. மேக்கப் போட்டு நான் குடிக்குறதுக்குள்ள டீ ஆறிடுச்சு. அப்போ இன்னொரு டீ போட்டு குடுத்தாரு. அந்த அளவுக்கு அஜித் ஒரு தங்கம். ரெண்டும் (அஜித், விஜய்) தங்கம் தான்” என நெகிழ்ந்து போய் பெர்சன்ட் ரவி தெரிவித்துள்ளார்.