வந்த வேகத்தில் ஜாக்பாட்… ஒரே சீரியலால் அத்தனை நடிகைகளையும் ஓரங்கட்டிய பிரபலம்!
Author: Udayachandran RadhaKrishnan26 February 2025, 2:25 pm
சின்னத்திரையே, பெரியதிரையோ எதில் உள்ளே நுழைந்தாலும் வந்த உடனே உச்சத்தை தொடுவது அரிதிலும் மிக அரிது. அப்படி வந்த பிரபலங்கள் அதிர்ஷ்டத்தால் உச்சம் தொட்டுள்ளனர்.
இதையும் படியுங்க : 25 ஆண்டுகளுக்கு பின் கம் பேக் கொடுக்கும் ஷாலினி…மீண்டும் அஜித்துடன் இணைகிறாரா.!
அப்படித்தான் விஜய் டிவி மூலம் ஈரமான ரோஜாவே சீரியலில் பிரபலமானவராக திகழ்ந்தவர் ஸ்வாதி கொண்டே. கச்சிதமாக நாயகி வேடத்தை ஏற்றதால், மக்கள் வரவேற்பு கொடுத்தனர்.
ஏற்கனவே கன்னட சீரியலில் பிரபலமான ஸ்வாதி கொண்டே மெய்யழகன் படத்தில் அரவிந்த் சுவாமி உறவினரின் தங்கச்சி முறையில் நடித்து அசத்தியிருப்பார்.
தற்போது இவர் சன் டிவியில் மூன்று முடிச்சு சீரியலில் கதநாயகியாக நடித்து வரும் அவருக்கு அமோக வரவேற்பை இல்லத்தரசிகள் கொடுத்துள்ளனர். டிஆர்பியில் இந்த சீரியல் முதலிடத்தில் உள்ளது.
இந்தநிலையில் சன்டிவி குடும்ப விருதுகள் விழா நடந்தது. இதில் இந்த ஆண்டுக்கான சிறந்த நடிகைகன் விருதினை நடிகை ஸ்வாதி கொண்டே வென்றுள்ளார். இதற்கு ரசிகர்கள் பெரும் வரவேற்பை கொடுத்து பாராட்டி வருகின்றனர்.