புது வருடத்தில் OTT-யில் களமிறங்கும் சூப்பர் ஹிட் படங்கள்…பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
Author: Selvan31 December 2024, 2:33 pm
இந்த 2024 ஆம் ஆண்டில் பல படங்கள் ரிலீஸ் ஆகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சில பெரிய படங்கள் தோல்வியை தழுவி பெரும் நஷ்டத்தை சந்தித்தது.
சில படங்கள் தியேட்டரை விட OTT-யில் வெளிவந்த பிறகு மக்களின் பாராட்டை பெற்றது.இந்த நிலையில் புது வருடத்தை சிறப்பிக்கும் விதமாக அடுத்த மாதம் பல படங்கள் OTT-யில் வெளியாக உள்ளது.அந்த வரிசையில் டாப் 5 படங்கள் இதோ..!
இதையும் படியுங்க: அவ்ளோ தா முடிச்சு விட்டீங்க போங்க…ஸ்டார் நடிகைகளுக்கு எண்ட் கார்டு போட்ட தமிழ் சினிமா..!
முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா தனக்கு பிடித்த படங்களில் ஒன்றாக கூறிய ஆல் வீ இமேஜின் அஸ் லைட் படம் ஜனவரி 3 ஆம் தேதி ஹாட்ஸ்டார் OTT-யில் வெளியாகிறது.இப்படம் இரண்டு செவிலியர்களின் வாழ்க்கையை சுற்றி எடுக்கப்பட்டிருக்கும்.இப்படம் சென்ற வருடம் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு விருதை தட்டி சென்றது.
அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த விடுதலை2 திரைப்படம் ஜீ 5 தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இப்படம் ஜனவரி மாதம் மூன்றாவது வாரத்தில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் கன்னட நடிகர் உபேந்திராவின் நடிப்பில் வெளியான யுஐ ஜனவரி மாதத்தில் OTT-க்கு வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.இப்படத்தின் உரிமையை சன் நெக்ஸ்ட் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
அதே மாதிரி மலையாள சினிமாவில் அதிரடி திரில்லர் படமாக வெளிவந்த பன்னி திரைப்படம் சோனி எல்ஐவி தளத்தில் வெளியாக உள்ளது.
மேலும் அல்லு அர்ஜுன் நடிப்பில் பான் இந்திய திரைப்படமாக வெளிவந்த புஷ்பா2 தி ரூல் திரைப்படம் ஜனவரி மாதம் OTT-யில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக தகவல் வந்துள்ளது.இதனால் புது வருடத்தின் முதல் மாதம் சினிமா ரசிகர்களுக்கு செம விருந்தாக அமையலாம்.