சிறந்த தயாரிப்பாளருக்கான விருதைப் பெற்ற விஷால் கிருஷ்ணா ரெட்டி.. வாழ்த்தும் ரசிகர்கள்..!

Author: Rajesh
1 April 2022, 12:34 pm

செல்லமே’ தொடங்கி ‘சண்டக்கோழி’ ‘இரும்புத்திரை’ என பல்வேறு படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகர் விஷால். இவர் பிரபல தயாரிப்பாளர் ஜி.கே ரெட்டியின் இரண்டாவது மகன் ஆவார். இவர் தற்போது தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருகின்றார்.

தனது நடிப்பு திறமையால் தமிழ் ரசிகர்களின் மனங்களில் நீங்காத இடம் பிடித்துள்ளார். நடிகராக மட்டுமல்லாது, சினிமா படத் தயாரிப்பாளராகவும், நடிகர் சங்க செயலாளராகவும் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 2021-ம் ஆண்டிற்கான ஸ்டார்ட் அப் இந்தியா மேகசைன் விருதுகள் விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் விஷால் அவர்களுக்கு சிறந்த தயாரிப்பாளருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

கையில் கோப்பையுடன் நடிகர் விஷால் இருக்கும் புகைப்படத்தினை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறன்றது. விருத பெற்ற விஷாலுக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

  • Tamil cinema re-release movies ரஜினி,விஜயை தொடர்ந்து ரீ-ரிலீஸில் குதிக்கும் பிரபல நடிகர்…அட இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே..!