முதல் படத்திலேயே 7 கதாநாயகிகளுடன் தமிழ் பிக்பாஸ் பிரபலம்.. படக்குழு வெளியிட்ட அப்டேட்..

Author: Rajesh
17 July 2022, 2:39 pm

சினிமாவில் அடியெடுத்து வைக்க ஆசைப்படும் பல நடிகர் நடிகைகளும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தங்களது மேடையாக பயன்படுத்தி கொள்கின்றனர். அப்படி தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் கடின உழைப்பு போட்டும் பிரபலம் அடைய முடியாத பல கலைஞர்களும், தங்கள் திறமையை இந்த உலகிற்கு காட்ட நினைத்து சரியான வாய்ப்பு அமையாதவர்களும் கலந்து கொண்டு சினிமாவில் கால் தடம் பதித்து சிறப்பாக பயணித்து வருகின்றனர்.

இதுவரை 5 சீசன்கள் பிக்பாஸ்ல் முடிவடைந்துள்ளது. ஒவ்வொரு சீசனில் இருந்தும் பல பிரபலங்கள் வெள்ளி திரையில் சிறப்பாக பயணித்து வருகின்றன. இந்நிலையில், கடந்த பிக்பாஸ் ஐந்தாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் நிரூப் நந்தகுமார்.

இவர் ஒரு பிரபலமான மாடல். பல விளம்பர படங்களில் நடித்த இவருக்கு சரியான வாய்ப்பு ஏதும் அமையவில்லை. யாஷிகாவின் முன்னாள் காதலரான இவர், அவரது reference மூலம் பிக் பாஸ் வீட்டில் நுழைந்தார். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து வெளியே வரும்போது இவருக்கு என தமிழ் ரசிகர்கள் பலரும் இருந்தனர். இந்த நிலையில் பிக் பாஸ் நிரூப் குறித்து ஒரு தகவல் ஒன்று வெளியாகி உள்ளது .

இயக்குனர் ஷங்கரின் உதவியாளராக இருந்த ஹோசிமினின் அசோசியேட் விவேக் கைபா பட்டாபிராம் இயக்கும் புதிய படத்தில் நிரூப் ஹீரோவாக நடிக்க உள்ளார். அந்த படத்தின் பெயர் ரெயின்போ என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் படத்தின் பூஜை நடைபெற்று அதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின.

இந்த படத்தில் நிரூபி ஏழு கதாநாயகிகளுடன் நடிக்க உள்ளாராம். அந்த ஏழு கதாநாயகிகளில் சிம்ரன் ராஜ் ஒருவர் என்றும், மற்ற ஆறு கதாநாயகிகள் யார் என்பது குறித்த விவரம் இன்னும் வெளிவரவில்லை. இப்படம் அதிகளவு பட்ஜெட்டில் தயாரிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 751

    1

    1