BGM கிங்… யுவன் ஷங்கர் ராஜா இத்தனை கோடி சொத்துக்களுக்கு அதிபதியா?

Author:
31 August 2024, 11:45 am

இசைஞானி இளையராஜாவின் இளைய மகளான யுவன் சங்கர் ராஜா தமிழ் சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளராக இருந்து வருகிறார். இவர் தனது தந்தை இளையராஜாவுடன் 8 வயது சிறுவனாக இருக்கும்போதே இசையமைப்பில் ஆர்வத்தை செலுத்தி அவருடன் இணைந்து வேலை பார்த்து வந்தார்.

8 வயதில் இசை ஞானி உடன் கைகோர்த்த யுவன் சங்கர் ராஜா பின்னாளில் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக ஆனார். ஒரு படத்திற்கு இசையமைப்பாளராக இவர் பெயர் இருந்தாலே போதும் என படத்தை தேடி சென்று பார்த்த ரசிகர்கள் கூட்டம் மளமளவென உருவாக்கினார்கள்.

அந்த அளவுக்கு உச்ச நட்சத்திர இசையமைப்பாளராக மக்களின் மனதை கவர்ந்தார். தனக்கென தனி மாஸ் ரசிகர்கள் கூட்டத்தையே வைத்துக்கொண்டு ஹீரோவை காட்டிலும் பந்தாவாக சுற்றி வந்த யுவன் சங்கர் ராஜா 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட்டான இசையமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

1997 ஆம் ஆண்டு வெளிவந்த அரவிந்தன் தான் யுவன் சங்கரின் இசையில் வெளிவந்த முதல் திரைப்படம். பின்னர் சூர்யா ஜோதிகா நடிப்பில் வெளிவந்த பூவெல்லாம் கேட்டுப்பார் திரைப்படத்தில் யுவன் சங்கர் ராஜாவின் இசை மற்றும் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் பாராட்டுகளை பெற்றுத்தந்தது .

இதை அடுத்து அஜித்தின் தீனா மாபெரும் வெற்றி பெற்றதால் தொடர்ந்து பில்லா ,மங்காத்தா, பில்லா 2 என வரிசையாக அஜித்தின் பல ஹிட் படங்களை கொடுக்க ஆரம்பித்தார்.

தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர்களான வசந்த், பாலா, லிங்குசாமி, வெங்கட் பிரபு ,தியாகராஜா குமார ராஜா, ராம் விஷ்ணுவர்தன் உள்ளிட்ட பல புகழ் பெற்ற இயக்குனர்களின் படங்களுக்கு தொடர்ந்து இசை அமைத்து பிரபலமான இசை அமைப்பாளராக என்ற இடத்தை பிடித்தார் யுவன் சங்கர் ராஜா.

இந்நிலையில் இன்று தனது 45 வது பிறந்தநாளை அவர் கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்த வண்ணம் இருக்கிறார்கள். இது ஒரு புறம் இருக்க யுவன் சங்கர் ராஜாவின் சொத்து மதிப்பு குறித்த விவரம் தற்போது வெளியாகி எல்லோரையும் வியப்படைய வைத்திருக்கிறது.

ஒரு படத்திற்கு கிட்டத்தட்ட ரூ. 3 முதல் ரூ.5 கோடி வரை சம்பளம் வாங்கும் யுவன் சங்கர் ராஜாவின் மொத்த சொத்து மதிப்பு கிட்டத்தட்ட ரூ.100 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. தயாரிப்பாளராகவும் பல்வேறு திரைப்படங்களை தயாரித்து அதன் மூலம் நல்ல வருமானத்தை ஈட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • ajith offers siruthai siva the next film but siva refused என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!