அஜித்துக்கு அச்சாரம் போட்டதே நான் தான்.. நான் உதவி செய்ததால் தான் அது நடந்தது : பிரபல நடிகர் ஓபன் டாக்!!
Author: Vignesh1 January 2023, 1:15 pm
தல அஜித் எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தன்னுடைய கடுமையான உழைப்பினாலும், விடாமுயற்சியினாலும் சினிமா உலகில் இந்த அளவிற்கு வளர்ந்து உள்ளார். அஜித் இந்தியாவில் மட்டுமில்லாமல் உலக அளவிலும் ரசிகர்களை கொண்டவர்.
அஜித் நடிப்பில் மட்டும் இல்லாமல் பல துறைகளில் சாதனை புரிந்து வருகிறார். இறுதியாக அஜித் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றிபெறவில்லை. இதை தொடர்ந்து மீண்டும் எச்.வினோத் இயக்கத்தில் துணிவு படத்தில் நடித்து இருக்கிறார்.
துணிவு படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக இருக்கிறது. இவர் நடித்த முதல் படம் அமராவதி என்று தான் அனைவருக்கும் தெரியும். இயக்குனர் செண்பக ராமன் இயக்கத்தில் வெளிவந்த “என் வீடு என் கணவர்” என்ற படத்தில் இவர் பள்ளி மாணவனாக நடித்துள்ளார். “என் வீடு என் கணவர்” படத்தில் வரும் என் கண்மனி என்ற பாடலில் சைக்கிளில் வரும் பள்ளி மாணவனாக அஜித் குமார் நடித்து உள்ளார். “என் வீடு என் கணவர்” கடந்த 1990ம் ஆண்டு திரைக்கு வந்தது.
இந்த படம் வசூல் ரீதியாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. இதை தொடர்ந்து அஜித் முதன் முதலாக பிரேம புஸ்தகம் என்ற படத்தின் தான் தெலுங்கில் நாயகனாக அறிமுகமானார். 1992 ஆம் ஆண்டு இந்த படம் வெளியாகியிருந்தது. இந்த படத்தை இயக்குனர் கோல்லுபுடி மாருதி ராவ் இயக்கியிருந்தார்.இவருடைய மகன்தான் கோல்லுபுடி ஸ்ரீநிவாஸ். இவர்தான் அஜித்தை வைத்து பிரேம புஸ்தகம் என்ற படத்தை இயக்கியிருந்தார்.
அப்போது தன் தந்தையுடன் சேர்ந்து கடலுக்கு சென்றிருந்தார். படத்தின் டைட்டில் வைப்பதற்காக பெரிய அலை முன்பு ஒரு புகைப்படத்தை எடுக்கச் சொன்னார். ஆனால், புகைப்படம் எடுக்கும் போது அந்த கடலலை அவரை இழுத்துச் சென்று விட்டது. வரும்போது அவர் பிணமாக தான் வந்தார். அதற்கு பிறகு அவருடைய தந்தை தன்னுடைய மகனின் ஆசையை நிறைவேற்ற அந்த படத்தை இயக்கியிருந்தார்.
அந்த படம் வெளியாகி ரசிகர்கள் நல்ல வரவேற்பையும் பெற்றிருந்தது. அந்த படத்திற்காக நந்தி விருது கூட கிடைத்திருந்தது.இப்படத்தின் தயாரிப்பாளருக்கு பாக்கியராஜை தெரியும் என்பதால், அவர் பாக்கியராஜை அழைத்து ‘படத்தை எடுத்தவரை பாருங்கள் இப்படத்திற்கு என்ன கிளைமேக்ஸ் இயக்குனர் யோசித்து வைத்திருந்தார் என்பது தெரியவில்லை. நீங்கள் படம் பார்த்து உங்கள் ஐடியாவை சொல்லுங்கள்’ என உதவி கேட்டாராம். பாக்கியராஜும் அப்படியே செய்து கொடுத்தாராம்.
#KBhagyaraj Helped For #Ajith First Movie #Premapusthagam pic.twitter.com/TEi6sV3ngQ
— chettyrajubhai (@chettyrajubhai) December 31, 2022
இந்த தகவலை ஒரு யுடியூப் சேனலில் தெரிவித்துள்ள பாக்கியராஜ் இது அஜித்துக்கு தெரியுமா என்பதே எனக்கு தெரியாது என தெரிவித்துள்ளார். அதே போல கோல்லுபுடி ஸ்ரீநிவாஸ் கடல் அலையில் அடித்து செல்லப்பட்ட காட்சியை தான் அன்பே சிவம் படத்தில் சுனாமி குறித்து மாதவனிடம் சொல்லும் காட்சியில் பயன்படுத்தி கொண்டார் என்பதும் இந்த படத்தின் மேலும் ஒரு சுவாரசிய தகவல்.