முதல் மனைவி கோமா..பூர்ணிமா மீது காதல்.. பாக்யராஜ் செய்த துரோகம்.!
Author: Selvan16 February 2025, 6:23 pm
நடிகரும் இயக்குனருமான பாக்கியராஜ் தன்னுடைய முதல் மனைவி இறந்த பிறகு நடிகை பூர்ணிமாவை இரண்டாவதாக திருமணம் செய்தது எல்லோருக்கும் தெரிந்த ஒரு விஷயம்,டார்லிங் டார்லிங் டார்லிங் என்ற படத்தின் போது பூர்ணிமா பாக்கியராஜ் இடையே ஒரு நல்ல நட்பு உருவாகியுள்ளது.
இதையும் படியுங்க: சிம்பு படத்திற்கு NO சொன்ன அனிருத்…களத்தில் இறங்கிய இளம் இயக்குனர்.!
அதன் பிறகு ப்ரவீனா உடல் நிலை சரியில்லாமல் இறந்த பிறகு தன்னுடைய அண்ணன் மறுமணம் செய்துகொள் என்று சொன்னதன் காரணமாக பூர்ணிமாவை காதல் செய்து,திருமணம் செய்து கொண்டேன் என அவரே பல பேட்டியில் கூறியுள்ளார்.

இந்த நிலையில் சமீபத்தில் மூத்த பத்திரிகையாளரான சபிதா ஜோசப் பாக்கியராஜ் பூர்ணிமா திருமணம் எப்படி நடந்தது என்பதை கூறியுள்ளார்.அதில் பாக்கியராஜ் திருமணம் ஒரு விபத்து போல தான்,தெலுங்கு மாநிலத்தை பூர்விகமாக கொண்ட ப்ரவீனா தான் பாக்கியராஜ் சினிமாவில் வளர்ந்து வர காரணமாக இருந்தார்.
அவர் கூட இணைந்து சில படங்களில் நடித்ததன் மூலம் காதல் செய்து அவரை திருமணம் செய்தார்,திடீரென ப்ரவீனாக்கு உடல்நிலை சரியில்லாமல் படுத்த படுக்கையாக கோமாவில் இருந்தார்,அந்த நேரத்தில் தான் பாக்கியராஜ் பூர்ணிமாவுடன் டார்லிங் டார்லிங் டார்லிங் படத்தில் நடித்து கொண்டு இருந்தார்,மனைவி கோமாவில் இருக்கும் போதே பாக்கியராஜ் பட ஷூட்டிங் நேரத்தில் பூர்ணிமாவை காதலித்து வந்துள்ளார்.
அதன் பிறகு அவர் இறந்த பிறகு பூர்ணிமாவை திருமணம் செய்தார்,இது அவர் முதல் மனைவிக்கு துரோகம் செய்தது போல் தான் உள்ளது என அந்த பேட்டியில் கூறியிருப்பார்,மேலும் அவருடைய இரண்டு திருமணத்தையும் எம்ஜிஆர் தான் நடத்தி வைத்திருப்பார் என்ற தகவலையும் கூறியுள்ளார்.