சொந்த மகனுக்கே சூனியம் வைத்த நடிகர்.. – உச்சகட்ட விரக்தியடைந்த வாரிசு நடிகர்..!
Author: Vignesh24 June 2023, 11:30 am
சினிமாவில் எண்பதுகளில் கொடி கட்டி பறந்த இயக்குனராக திகழ்ந்து பல வெற்றி படங்களில் நடித்தும், இயக்கியும் இயக்குனர் சிகரமாக திகழ்ந்து வருபவர் கே பாக்யராஜ்.
இவர் தற்போது ஒரு சில படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். பாக்கியராஜ் தன் மகன் சாந்தனுவை சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தார். ஆனால் சரியான ஒரு இடத்தினை பாக்யராஜ் போன்று அவரது மகனால் பிடிக்க முடியாமல் கஷ்டப்பட்டு வருகிறார்.
ஆரம்ப காலகட்டத்தில் மகனின் கால்ஷீட் மற்றும் கதை விஷயத்தில் பாக்கியராஜின் தலையீடு அதிகமாக இருந்துள்ளதாம். அப்படி ஒரு முறை சாந்தனுக்கு வந்த வாய்ப்பினை மறுத்து கேரியரையே, தொலைக்க காரணமாய் இருந்துள்ளார் பாக்கியராஜ்.
அதாவது, சுப்பிரமணியபுரம் படத்தில் ஜெய் ரோலில் முன்னதாக சசிகுமார் நினைத்து கதையை பாக்யராஜிடம் கூறியிருக்கிறார். ஆனால் கதை பாக்கியராஜிற்கு பிடிக்கவில்லை என்று மறுத்து விட்டாராம். அதன் பின் தான் ஜெய் அப்படத்தில் நடித்துள்ளார்.
இதனிடையே, சுப்பிரமணியபுரம் படத்தில் சாந்தனு மட்டும் நடித்திருந்தால் அவரது கேரியர் வேறொரு இடத்திற்கு சென்றிருக்கும் என்று சினிமா விமர்சகர்கள் விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.