வீட்டை விட்டு வெளியேறிய மகள் திடீர் கர்ப்பம்.. மனமுடைந்த பாக்யராஜ்!

Author: Udayachandran RadhaKrishnan
20 November 2024, 1:40 pm

நடிகர் பாக்யராஜ், தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர். தமிழ் சினிமாவை வேறு திசை நோக்கி பயணிக்க முக்கிய காரணமாக அமைந்தவர்.

ரகசிய திருமணம் செய்த பாக்யராஜ் மகள்

இவர் பாரதிராஜாவின் உதவி இயக்குநராக பணிபுரிந்து போதே, சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள் போன்ற படத்திற்கு கதை எழுதினார். இவர் பிரவீணா என்ற நடிகையை முதலில் திருமணம் செய்தார். காதல் திருமணம் என்பதால் நன்றாக சென்று கொண்டிருந்த வாழ்க்கையில் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு பிரவீணா உயிரிழந்தார்.

Bhagyaraj Praveena Poornima

இவர் மறைவை தாங்க முடியாமல் பாக்யராஜ் துவண்டிருந்த போதுதான், நடிகை பூர்ணிமா காதலை சொன்னார். பாக்யராஜ் முதலில் தடுமாற, குடும்பம் ஒன்று கூடி பேசி திருமணத்தை முடித்தனர்.

சரண்யா, சாந்தனு என்ற இரு குழந்தைகளை பெற்றெடுத்த பின், சினிமா கேரியரில் அதிகம் கவனம் செலுத்தினார் பாக்யராஜ். பாரிஜாதம் என்ற படத்தில் சரண்யா கதாநாயகியாக நடித்திருந்தார். அதன் பின் இவருக்கு பட வாய்ப்புகள் அமையவில்லை. சாந்தனு நடிகர், டான்சராக உள்ளார்.

Bhagyaraj Daughter and son

இப்படியிருக்கையில், திடீரென திருமணமே செய்து கொள்ளாமல் இருக்கும் சரண்யா தனக்கு ஒரு ஆண் குழந்தை இருப்பதாக கூறிய செய்தி கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டது.

பேரனுடன் நேரத்தை கழிக்கும் பாக்யராஜ்

இது குறித்து பேசிய பாக்யராஜ், வீட்டை விட்டு வெளியேறிய மகள் சரண்யா, ரகசிய திருமணம் செய்து கொண்டுள்ளார். சாதி, இனம், பணத்தை தாண்டி வேறு ஒரு பிரச்சனையால் அந்த உறவு முறிந்தது.

Bhagyaraj Happy with Grandson

மகள் கர்ப்பமாக இருக்கும் செய்தியை அறிந்தேன். பின்னர் பூர்ணிமாவை மகளை பார்க்க அனுமதித்தேன். தற்போது பேரனுடன் தான் என் வாழ்க்கையை கழிக்கிறேன். அவன் இல்லாமல் நான் இல்லை. நான் இல்லாமல் அவன் இல்லை என கூறியிருக்கிறார்.

சரண்யா திருமணம் செய்யாமல் இருக்கிறார் என்று அண்மையில் பேசப்பட்ட போது கூட இந்த விஷயத்தை கூறாமல் இருந்த பாக்யராஜ் குடும்பம் தற்போது இதை வெளியில் கூறியுள்ளனர்.ஆனால் சரண்யாவின் கணவர் யார் என்று இதுவரை கூறவில்லை. எதனால் பிரிந்தார்கள், ஏன் காதல் திருமணம் என்ற ரகசியம் காக்கப்பட்டு வருகிறது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 246

    0

    0