ஒரு பெரிய மனுஷன் பண்ற வேலையா இது.. இழிவாக நடந்து கொண்ட இளையராஜாவின் முகத்திரையை கிழித்த இசையமைப்பாளர்..!
Author: Vignesh4 August 2023, 6:45 pm
தமிழ் சினிமாவின் தலைமுறைக்கும் பேசும், பேசப்போகும் இசை அரசனாக பார்க்கப்படுபவர் இசைஞானி இளையராஜா. இவர் அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் 1976 இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் 1000த்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார். தமிழின் நாட்டுப்புற இசையினை அதன் தரம் குறையாமல் வழங்குவதில் அவர் ஞானி.

இனிமையான பாடலுக்கு கோடிக்கணக்கான ரசிகர்களை தன்வசப்படுத்துயிருக்கும் இளையராஜா பேச ஆரம்பித்தாள் எல்லோரும் முகம் சுளிக்கப்படி அடுத்தவர்களை பற்றி மோசமாக மரியாதை இல்லாமல் இழிவாக நடந்துக்கொள்வார். சமீப காலங்களில் அதிக சர்ச்சைகளில் இசைஞானி சிக்கி வருகிறார். இளையராஜா எப்படிப்பட்டவர் என யாரை கேட்டாலும்? அவரது இசையை தவிர வேறு எதையும் கேட்காதீங்க என கூறிவிடுவார்கள். அவ்வளவு மோசமாக பிறரிடம் நடந்துக்கொள்ளவார்.

தன் உடன் பிறந்த தம்பி கங்கை அமரனின் வளர்ச்சிக்கு ஆரம்பத்தில் முட்டுக்கட்டை போட்டுள்ளார். யாரோ மூலமாக கிடைத்த வாய்ப்பை கூட ” அவனுக்கு இசை பத்தி என்ன தெரியும் ” அவனை போடாதீங்க என சொல்லி வாய்ப்பை பறித்தாராம்.

எல்லாம் தன்னைவிட வர்ந்திடுவானோ என்ற அச்சத்தில் தான். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில், 90 கிட்ஸ் களின் சிறந்த இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் வளர்ந்த பிரபலமானவர் இசையமைப்பாளர் பரணி. பெரியண்ணா படத்தில் ஆரம்பித்த இவரது இசைப்பயணம் நாம் அறிந்திராத பல படங்களுக்கு இசையமைத்து கொடுத்திருக்கிறார் பரணி.
இவர் கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து கொடுத்திருக்கிறார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் தான் வளராததற்கு என்ன காரணம் என்றும் இளையராஜா தன்னை எப்படி நடத்தினார் என்றும் தெரிவித்துள்ளார். சினிமாவில் யார் உங்களை காணாமல் ஆக்குனது என்ற கேள்விக்கு பதில் அளித்த இசையமைப்பாளர் பரணி,
இளையராஜா என் குரு இல்லை ஏ ஆர் ரகுமான் சொல்வது போல் தனக்கு மாஸ்டர் மட்டுமே, இளையராஜா தனக்கு என்ன வாய்ப்பு கொடுத்தார். அங்கே இருந்தேன் எடுபுடி வேலை பார்த்து ஐந்து வருடமாக இருந்தும், இளையராஜாவிடம் பேச சென்றபோது யார் நீ என்று கேட்டுவிட்டார். இதனிடையே, இளையராஜாவின் மச்சான் சசி தன்னை வைத்து ஐயப்பன் பாடலை எழுதிக்கொண்டார். சிக்குபுக்கு சிக்கு புக்கு ரயிலே பாடலை பார்த்து ராஜா சார் சிரித்தார் என்று பரணி தெரிவித்திருந்தார்.
மேலும், ஐந்து வருடத்தில் இளையராஜாவிடம் இருந்ததற்கு எம் எஸ் வியுடன் இருந்திருக்கலாம் என்று நெறியாளர் கேட்டதற்கு, அவரைப் பார்த்தேன் என்னை மரியாதையுடன் நடத்தினார். ரஹ்மானிடம் சென்று இருக்கிறேன். ரோஜா படத்தின் போது பார்த்து என்னை விசாரித்தார். இளையராஜா மனிதர்களுக்கு நல்லது பண்ணியது கிடையாது. கடவுளுக்கு கோவில்களுக்கும் பண்ணுவார். எனக்கு குரு எஸ் ஏ சந்திரசேகர் தான் அவர்தான் என்னை அறிமுகப்படுத்தினார் வளர்த்து விட்டவர் என பரணி தெரிவித்துள்ளார்.
இளையராஜாவால் கற்றுக் கொடுத்து வளர்ந்தவர்கள் யாரும் இல்லை என்றும், அப்படி இருந்திருந்தால் பல மேதைகள் வந்திருக்கலாம் என்று நெறியாளர் முக்தர் தெரிவித்திருக்கிறார். மேலும் ரஜினிக்கு ராஜாவுக்கும் இடையே பிரச்சனைக்கு காரணம் இருவரும் பேசிக் கொள்ளும்போது அவருக்கென்ன கார் கம்போஸ் பண்ற இடம் எல்லாம் ஏசி நாம தான் வெயில் நடிக்கிறோம் என்று இளையராஜா குறித்து ரஜினி சொல்லியதால், ரஜினியிடம் இளையராஜா ஆர்மோனியம் பெட்டியை கொடுத்து அவரை மியூசிக் பண்ண சொல்லுங்கன்னு கடுப்பாக தெரிவித்துவிட்டாராம்.