காத்திருந்தது போதும்.. ஒரு காலத்தில் ஹீரோவாக இருந்த பரத்துக்கா இந்த நிலை இப்படி இறங்கிட்டாரே..!
Author: Vignesh11 March 2024, 10:32 am
தமிழ் சினிமாவில் திறமை இருந்தும் மிகச்சிறந்த நடிகராக ஒரு சில ஹிட் படங்களில் நடித்து பின்னர் புது புது நடிகர்களின் வரவாலும். வாரிசு நடிகர்களின் ஆதிக்கத்தாலும் சினிமாவை விட்டு அட்ரஸே இல்லாமல் போனவர்கள் பல பேர் உண்டு. அந்தவரிசையில் இருப்பவர் தான் நடிகர் பரத்.

இவர் ஒரு காலத்தில் தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக இருந்தார். தமிழில் 2003ம் ஆண்டு சங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் திரைப்படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகம் ஆனார். அதன் பிறகு செல்லமே, காதல், பிப்ரவரி 14, எம் மகன், வெயில், பழனி, நேபாளி, கோ, ஐந்து ஐந்து ஐந்து உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

ஆரம்பத்தில் ஹிட் ஹீரோவாக புகழ் பெற்ற பரத் பின்னர் அடுத்தடுத்த பட தோல்வியால் மார்க்கெட் இழந்தது சினிமாவை விட்டு ஒதுங்கியே இருந்து வந்தார். அதன் பின்னர் ஜெஸ்லி என்ற பெண்ணை காதல் திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு ஆகஸ்ட் 2018 இல் இரட்டை மகன்கள் பிறந்தனர். கடைசியாக பரத் ” love” என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக வாணி போஜன் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஹீரோ வாய்ப்புகள் குறைந்ததால் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். அதன் பின்னர், நெகட்டிவ் ரோல்கள் போன்றவற்றிலும் நடிக்க தொடங்கிவிட்டார். இந்த நிலையில், பரத் அடுத்து இயக்குனர் முத்தையாவின் மகன் ஹீரோவாக அறிமுகமாகும் படத்தில் வில்லனாக நடிக்கிறாராம். ஒரு காலத்தில், முக்கிய ஹீரோவாக இருந்த விஷாலுக்கு கூட வில்லனாக நடித்தவர். இப்போது, இப்படி இறங்கிவிட்டார் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.