ஒரு வழியாக முடிவுக்கு வந்த சீரியல்..! கிளைமேக்ஸில் இயக்குநர் போட்ட புது டிவிஸ்ட் : பாரதி கண்ணம்மா 2 – ஆ…??

விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்கள் பட்டாளம் அதிகம் கொண்டு TRPயில் இடம்பிடித்து வரும் சீரியல் தொடர் பாரதி கண்ணம்மா. ஒரு சராசரி பெண்மணி குடும்பத்தில் சந்திக்கும் சிக்கல்கள், எதிர்ப்புகள் குறித்து எதார்த்தமாக அமைக்கப்பட்ட இந்த தொடர், நாளடைவில் ஜவ்வு போல இழுப்பதாக நெட்டிசன்கள் கலாய்த்து மீம்ஸ்களை தெறிக்க விட்டு வருகின்றனர்.

இந்த சீரியலில் முதன் முதலில் கண்ணம்மாவாக நடித்தவர் நடிகை ரோஷினி. மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. இதன்பின் சீரியலில் இருந்து விலகிய ரோஷினிக்கு பதிலாக வினுஷா தேவி என்பவர் தற்போது நடித்து வருகிறார்.

முதல் சில வாரங்களில் மக்களின் மனதை கவர முடியாத நிலையில், அடுத்தடுத்த நாட்களில் கண்ணம்மாவாக மக்கள் மனதில் வினுஷா தேவி இடம்பிடித்துவிட்டார். இந்நிலையில், மலையாள தொடரான கருத்தம்மா என்ற தொடரின் ரீமேக்காக பிரவீன் பென்னட் இயக்கிய இந்த தொடர் ஆரம்பத்தில் ஹிட்டாக ஓடியது.

ஆனால் இடையில் கதைக்களத்தில் விறுவிறுப்பு இல்லாமல் செல்ல ரசிகர்கள் தொடரை நிறைய கலாய்த்து வந்தார்கள். அட சீரியலை முடிங்கப்பா என ரசிகர்கள் கதறி நிறைய மீம்ஸ், வீடியோக்களை வெளியிட்டும் இயக்குனரை சாடியும் வந்தனர்.

இந்நிலையில், தமிழ்நாட்டின் முன்னணி மெகா தொடரான பாரதி கண்ணம்மா சீரியல் முடிவுக்கு வரப்போவதாக அதிகாரப்பூர்வ வீடியோ வெளியாகியுள்ளதை
பார்த்த ரசிகர்கள் அட சூப்பர் நல்ல முடிவு என தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், பாரதி கண்ணம்மா சீரியலின் தற்போதுள்ள நிலைப்படி இன்னும் ஓரிரு வாரங்களில் சீரியல் முடிவுக்கு வரும் என்றும், பாரதியின் நினைவுகளை மீட்டெடுக்க கண்ணம்மா போராடி வருகிறார்.

பாரதியின் நினைவுகள் பழைபடி மீண்டு வந்தபின், பாரதியியும் – கண்ணம்மாவும் இணைத்துவிட்டால், பாரதி கண்ணம்மா சீரியல் முடிவுக்கு வந்துவிடும் என தகவல் வெளிவந்துள்ளது.சமீபத்தில் வெளிவந்த ப்ரோமோவை பார்க்கும் பொழுது கூட இருவரும் இணைய போவதுபோல் தான் காட்டியுள்ளனர்.

மேலும், ஒருவழியாக இப்படி போகும் போக்கில் சீரியல்முடிந்துவிடும் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்த்தனர். ஆனால் இயக்குநர் கிளைமேக்ஸை வைத்து புது பிளான் போட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ஹேமா டாக்டராகவும் லட்சுமி கலெக்டர்கவும், வளர்ந்துவிட்டதை கதையாக வைத்து பாரதி கண்ணம்மா 2வை எடுக்கவுள்ளாராம். பொறுந்திருந்து பார்ப்போம் என்ன நடக்க போகிறது என்று.

Poorni

Recent Posts

தளபதி விஜய் CM ஆனால்.. ராகுல் காந்தி PM : எழுதி வெச்சிக்கோங்க.. தவெக பெண் நிர்வாகி பேச்சு!

வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…

14 hours ago

தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!

சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…

14 hours ago

ருதுராஜ்க்கு பதில் மீண்டும் கேப்டனாக தல தோனி : சிஎஸ்கே அணியில் நடந்த திடீர் மாற்றம்!

2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…

15 hours ago

ரீரிலீஸுக்கு தயாராகி வரும் ரஜினிகாந்தின் அனிமேஷன் திரைப்படம்! அதுவும் புதுப்பொலிவுடன்…

அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…

16 hours ago

பேட்டிக் கொடுக்க பயந்தாரா புஸ்ஸி ஆனந்த்.. தெறித்து ஓடிய தவெக தொண்டர்கள்!

வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…

16 hours ago

மீண்டும் ரொமான்டிக் ஹீரோவாக களமிறங்கும் சூர்யா? அதுவும் இந்த டைரக்டர் படத்துலயா?

ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…

16 hours ago

This website uses cookies.