“Adjustment வரியா-னு கேட்டாங்க”.. பகீர் தகவலை வெளியிட்ட ‘பாரதி கண்ணம்மா 2’ சீரியல் நடிகை..!

Author: Vignesh
9 March 2023, 3:00 pm

வீட்டில் உள்ள இல்லத்தரசிகளை கட்டிப்போட்டு வைத்துள்ளது மெகா சீரியல்கள். காலையில் ஆரம்பித்த சீரியல்கள் இரவு 11 மணி வரை நீடித்துக் கொண்டே இருக்கிறது

அதுவும் சீரியலுக்கு பிரபலமான சன் டிவிக்கு போட்டியாக விஜய் டிவி, கலர்ஸ், ஜீ டிவி என எல்லா டிவி சேனல்களும் தற்போது சீரியல் என்ற ஆயுதத்தை கையில் எடுத்து டிஆர்பியை எகிற வைத்து வருகின்றன.

vijay tv serial - updatenews360

ஆனால் ஆரம்பத்தில் எப்படி சீரியல்களால் இல்லதரசிகளை கட்டிப்போட்டதோ இன்னும் அப்படியே மாறாமல் உள்ளது சன் டிவி.

சீரியல்களுக்கு பெயர் போன தொலைக்காட்சி என்று முன்பெல்லாம் சன் டிவியை தான் கூறுவார்கள். ஆனால் இப்போது அனைத்து தொலைக்காட்சியிலும் தொடர்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.

இந்நிலையில், விஜய் டிவியில் மதியம் மற்றும் மாலை நேரங்களில் வெற்றிகரமான ஒளிபரப்பாகின்றன. இதனிடையே, இளைஞர்களை கவரும் தொடர்கள், வீட்டுப் பெண்கள் பார்ப்பது போல் கதையுள்ள தொடர்கள் என ஒளிபரப்பாகி வருகின்றன.

bharathi kannamma 2-updatenews360

இதனிடையே, விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல்களில் ஒன்று தான் பாரதி கண்ணம்மா 2. இந்த சீரியலுக்கு தற்போது மக்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.

இந்த சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ரேஷ்மா பிரசாத். இவர் சமீபத்தில் சின்னத்திரையில் நடக்கும் பிரச்சனைகளை பற்றி பேட்டியில் யொன்றில் பகிர்ந்துள்ளார் .

bharathi kannamma 2-updatenews360

அதில் அவர் பேசிய போது, ” சின்னத்திரை பொறுத்தவரை சின்ன கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தாலும் அட்ஜஸ்மெண்ட் torture நடைப்பெற்று வருவதாகவும், பல பேர் தன்னிடம் இது போன்று கேட்டு இருந்ததாகவும், தான் அவர்களுக்கு செவி சாய்க்காமல் நடிப்பே வேண்டாம் என்று சென்று விட்டதாகவும், அட்ஜஸ்மெண்ட் பிரச்சனைகள் இருப்பதால் தான் ஆடிஷன் போறதையே நிறுத்தி விட்டதாக தெரிவித்துள்ளார்.

தற்போது இவரின் பேட்டியை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளார்கள்.

bharathi kannamma 2-updatenews360
  • Allu Arjun Pushpa2 box office collection புத்தாண்டில் புது மைல்கல்…அதிர வைக்கும் அல்லு அர்ஜுன் புஷ்பா2 வசூல்..!
  • Views: - 747

    3

    3