என்ன இப்படி முடிச்சுட்டாங்க..! க்ளைமேக்ஸை நெருங்கிவிட்ட பாரதி கண்ணம்மா?.. இறுதிக்கட்ட படப்பிடிப்பு காட்சி லீக்..! ரசிகர்கள் ஷாக்..!

Author: Vignesh
23 November 2022, 2:00 pm

விஜய் தொலைக்காட்சி சேனலில் கடந்த 2019ல் இருந்து ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் சீரியல் பாரதி கண்ணம்மா.

சீரியலை பார்க்கிறார்களோ இல்லையோ, அதில் வரும் காட்சிகளை ட்ரோல் செய்து கலாய்த்து மீம்ஸ் புகைப்படங்களை வெளியிட்டு வைரலனதே அதிகம் தான். அப்படி டி.என்.ஏ டெஸ்ட் ஒன்றிற்காக இந்த சீரியலை இப்படி இழுத்தடித்து வருகிறார்களே என்று நெட்டிசன்கள் புலம்பியும் வந்தனர்.

bharathi kannama- updatenews360

அப்படி ஒரு வழியா வெண்பாவுக்கு திருமணம் பாரதியின் டிஎன்ஏ முடிவு என்று எபிசோட் வந்த நிலையில் சீரியல் முடிந்துவிடும் என்று நினைத்து வந்தார்கள். ஆனால் இந்த வாரம் எபிசோட்டில் ஹேமாவை வெண்பா பிளான் போட்டு கடத்திய சம்பவம் நடந்துள்ளது.

bharathi kannama- updatenews360

ஒருவேலை பாரதி டெல்லி சென்று டெஸ்ட் ரிப்போர்ட் வாங்கிவிட்டு வெண்பாவின் சுயரூபத்தை கண்டுபிடித்து சீரியலை முடிப்பார்களோ என்று சமீபத்திய பிரமோ வீடியோவில் நெட்டிசன்கள் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

அது அப்படியே நடந்துள்ளதாக பாரதி கண்ணம்மாவின் கிளைமேக்ஸ் ஷூட்டிங் வீடியோ லீக்காகி வைரலாகி வருகிறது.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?