அரைத்த மாவை அரைத்த ‘பாரதி கண்ணம்மா’ சீரியல்..! அதிகாரப்பூர்வமாக வந்த முக்கிய வீடியோவால் ரசிகர்கள் ஹேப்பி..!

Author: Vignesh
19 January 2023, 5:00 pm

விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்கள் பட்டாளம் அதிகம் கொண்டு TRPயில் இடம்பிடித்து வரும் சீரியல் தொடர் பாரதி கண்ணம்மா. ஒரு சராசரி பெண்மணி குடும்பத்தில் சந்திக்கும் சிக்கல்கள், எதிர்ப்புகள் குறித்து எதார்த்தமாக அமைக்கப்பட்ட இந்த தொடர், நாளடைவில் ஜவ்வு போல இழுப்பதாக நெட்டிசன்கள் கலாய்த்து மீம்ஸ்களை தெறிக்க விட்டு வருகின்றனர்.

bharathi kannama- updatenews360

இந்த சீரியலில் முதன் முதலில் கண்ணம்மாவாக நடித்தவர் நடிகை ரோஷினி. மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. இதன்பின் சீரியலில் இருந்து விலகிய ரோஷினிக்கு பதிலாக வினுஷா தேவி என்பவர் தற்போது நடித்து வருகிறார்.

Roshini-Haripriyan-2-Updatenews360

முதல் சில வாரங்களில் மக்களின் மனதை கவர முடியாத நிலையில், அடுத்தடுத்த நாட்களில் கண்ணம்மாவாக மக்கள் மனதில் வினுஷா தேவி இடம்பிடித்துவிட்டார். இந்நிலையில், மலையாள தொடரான கருத்தம்மா என்ற தொடரின் ரீமேக்காக பிரவீன் பென்னட் இயக்கிய இந்த தொடர் ஆரம்பத்தில் ஹிட்டாக ஓடியது.

ஆனால் இடையில் கதைக்களத்தில் விறுவிறுப்பு இல்லாமல் செல்ல ரசிகர்கள் தொடரை நிறைய கலாய்த்து வந்தார்கள். அட சீரியலை முடிங்கப்பா என ரசிகர்கள் கதறி நிறைய மீம்ஸ், வீடியோக்களை வெளியிட்டும் இயக்குனரை சாடியும் வந்தனர்.

Bharathi kannamma updatenews360

இந்நிலையில், தமிழ்நாட்டின் முன்னணி மெகா தொடரான பாரதி கண்ணம்மா சீரியல் முடிவுக்கு வரப்போவதாக அதிகாரப்பூர்வ வீடியோ வெளியாகியுள்ளதை
பார்த்த ரசிகர்கள் அட சூப்பர் நல்ல முடிவு என தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

  • Surya Retro Movie OLD BUT MASS..சூர்யா 44 படத்தின் மிரட்டலான டைட்டில்…சம்பவம் செய்த டீசர்.!
  • Views: - 1615

    113

    41