ஊரை விட்டு செல்லும் கண்ணம்மா.. ஐயோ… மறுபடியும் முதல்ல இருந்தா?.. முடியல, இதுக்கு ஒரு என்டே இல்லையா.. நெட்டிசன்கள் ஷாக்..!

Author: Vignesh
12 December 2022, 3:00 pm

இந்த வார பாரதி கண்ணம்மா சீரியலின் ப்ரோமோ வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. விஜய் தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகும் தொடர்களில் ஒன்றான பாரதி கண்ணம்மா, தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

பாரதி மற்றும் கண்ணம்மா ஆகிய இருவரும் பிரிந்து வாழ தொடங்கி, அவர்களின் குழந்தைகள் தனித்தனியாக வாழ, பின்னர் அவர்கள் குறித்த உண்மையும் தெரிய வர இப்படி பாரதி கண்ணம்மாவில் வரும் ஒவ்வொரு நகர்வும் விறுவிறுப்பை கூட்ட தான் செய்தது.

bharathikannammaserial_updatenews360

விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா சீரியலின் சமீபத்திய எபிசோடில், பாரதி வெண்பாவை திருமணம் முற்பட்டதால் பாரதியின் குடும்பம் மற்றும் பாரதியிடம் வளர்ந்து வந்த குழந்தை ஹேமா அனைவருமே பாரதியை வெறுத்தனர்.

இதனிடையே, வெண்பாவுக்கு ரோகித்துடன் திருமணம் நடந்து விட்டது. ஹேமா & லெட்சுமி இருவரும் பாரதியின் குழந்தைகள் என டிஎன்ஏ ரிசல்ட் வந்து விட்டது. பாரதியின் சந்தேகங்கள் தீர்ந்துவிட்ட நிலையில் குழந்தை ஹேமா, லெட்சுமி இருவரையும் அழைத்து கண்ணம்மா கண் காணாத இடத்திற்கு பேருந்தில் பயணம் செய்கிறார்.

kannamma - updatenews360

கண்ணம்மா & குழந்தைகளை அழைத்து வர குடும்பத்துடன் பாரதி, கண்ணம்மா வீட்டிற்கு செல்கிறார். வீட்டில் கண்ணம்மா & குழந்தைகள் இல்லாமல் போவதை கண்டு கதறி அழும் பாரதி, கண்ணம்மாவை “எங்கே போய் தேடுவேன்” என தலையில் அடித்து கொள்கிறார்.

இனி கண்ணம்மா & குழந்தைகளை பாரதி தேடி கண்டு பிடிக்கும் படலம் பாரதி கண்ணம்மாவில் துவங்க உள்ளதால், ஐயோ… மறுபடியும் முதல்ல இருந்தா?.. முடியல, இதுக்கு ஒரு என்டே இல்லையா.. நெட்டிசன்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ