இது தான் உனக்கு கடைசி ஷாட்.. கமலிடம் பொதுவெளியில் மோதிய பாரதிராஜா..!

Author: Vignesh
9 May 2023, 1:30 pm

தமிழ் சினிமாவில் 16 வயதினிலே என்ற சூப்பர் ஹிட் படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தவர் இயக்குனர் பாரதிராஜா. முதல் படமே பெரியளவில் வரவேற்பு பெற்று அடுத்தடுத்த ஆண்டுகளில் வெற்றிப்படங்களை இயக்கி வெளியிட்டு வந்தார்.

Bharathiraja - Updatenews360

அவர் இயக்கிய படங்களில் நடித்த நடிகர், நடிகைகள் தற்போது தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறக்கும் பிரபலங்களாக இருந்து வருகிறார்கள்.

முன்னணி இயக்குநராக வலம் வரும் இயக்குநர் பாரதிராஜா தற்போது படங்களை இயக்குவதை நிறுத்தி விட்டு தமிழ் சினிமாவில் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

kamal bharathiraja-updatenews360

தமிழ் சினிமாவை முதன் முதலாக செட்டிற்குள் இருந்து ரியல் லொக்கேஷனுக்கு கொண்டு வந்தவர் பாரதிராஜா. இவரின் ஆரம்ப காலத்தில் ரஜினி, கமலை வைத்து மெகா ஹிட் படத்தை கொடுத்தார்.

kamal bharathiraja-updatenews360

அதனை தொடர்ந்து பாராதிராஜா கமலுடன் சிவப்பு ரோஜாக்கள், கைதியின் டைரி ஆகிய படங்களில் பணியாற்றி உள்ளார். இந்த கைதியின் டைரி படத்தின் கிளைமேக் எடுக்கும் போது கமலுக்கு ஏதோ பாரதிராஜ மேல் கோபமாக இருந்த காரணத்தினால், படப்பிடிப்பிற்கு வராமல் இருந்துள்ளார்.

kamal bharathiraja-updatenews360

இதனையடுத்து, பாராதிராஜா கமலை அழைத்து வாருங்கள் கிளைமேக்ஸ் எடுக்க வேண்டும் என்று அழைத்து, கமல் வந்ததும், கிளைமேக்ஸ் காட்சியை எடுத்து முடித்த பாராதிராஜா, இது தான் உன்னை நான் இயக்கிய கடைசி ஷாட் என்று சொல்லி விட்டு மிகவும் கோபத்துடன் சென்று விட்டாராம். இதனை சமீபத்தில் ஒரு பேட்டியில் பாராதிராஜாவே தெரிவித்துள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 643

    1

    1