80 வயதில் இளம் நடிகை மீது பிரபல இயக்குனருக்கு காதல்?… காதல் வசனம் பேசி கரெக்ட் பண்ணிடுவாரு போல..!
Author: Vignesh16 February 2023, 11:30 am
தமிழ் சினிமாவில் 16 வயதினிலே என்ற சூப்பர் ஹிட் படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தவர் இயக்குனர் பாரதிராஜா. முதல் படமே பெரியளவில் வரவேற்பு பெற்று அடுத்தடுத்த ஆண்டுகளில் வெற்றிப்படங்களை இயக்கி வெளியிட்டு வந்தார்.
அவர் இயக்கிய படங்களில் நடித்த நடிகர், நடிகைகள் தற்போது தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறக்கும் பிரபலங்களாக இருந்து வருகிறார்கள்.

பாரதிராஜா என்றாலே தன் படத்தில் நடிக்கும் கலைஞர்களிடம் இருந்து நடிப்பு வரவேண்டி கன்னத்தில் பளார்விடவும் தயங்கமாட்டார். அப்படி அவர் கை வைத்து அடிக்காமல் உயர்ந்த நட்சத்திரங்களே கிடையாது.

இதனிடையே, சமீபத்தில் சிறப்பு விருந்தினராக பாரதிராஜா தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள வாத்தி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய போது, ‘தான் வாத்தி படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள சம்யுக்தாவை பார்க்கும் போது தனக்குள் காதல் ஆசை வருகிறது என்றும், தான் கடலோர கவிதைகள் என்ற திரைப்படத்தில் ஒரு டீச்சரை அறிமுகம்படுத்தினேன்’ எனவும் தெரிவித்தார்.
மேலும் அவர் ‘தான் எப்போதெல்லம் சம்யுக்தாவை பார்க்கிறேனோ அப்போதெல்லம் காலம் தப்பி பிறந்து விட்டேன் என்கிற எண்ணம் தனக்கு தோன்றுவதாகவும், தான் இப்பொது கூட சம்யுக்தாவை காதலிப்பதாக நகைச்சுவையாக பாரதிராஜா கூறியுள்ளார்.