‘என் மகன் விஜய்க்கு யாருமே வாய்ப்பு தரல.. ஆனா இன்னைக்கு’ -மேடையில் பிரபல இயக்குனரை பங்கம் செய்த SAC..!
Author: Vignesh8 May 2023, 3:30 pm
தமிழ் சினிமாவில் இயக்குநர் தங்கர் பச்சான் பார்த்திபன், நந்திதா தாஸ் ஆகியோரது நடிப்பில் வெளியான ‘அழகி’ படத்தை இயக்கியதன் மூலம் இயக்குநராக அறிமுகமானவர். இதனை தொடர்ந்து ‘சொல்ல மறந்த கதை’, ‘பள்ளிக்கூடம்’ உள்ளிட்ட பல படங்களை இயக்குநர் தங்கர் பச்சான் எடுத்தவர். தற்போது ‘கருமேகங்கள் கலைகின்றன’ என்ற படத்தை உருவாக்கி உள்ளார்.
‘கருமேகங்கள் கலைகின்றன’ படத்தில் பாரதிராஜா, யோகிபாபு, கெளதம் வாசுதேவ் மேனன், அதிதி பாலன், எஸ்.ஏ.சி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கின்றனர். மேலும் இந்த படத்திற்கு, ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். ‘கருமேகங்கள் கலைகின்றன’ படத்திற்கு ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
‘கருமேகங்கள் கலைகின்றன’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பிரபல இயக்குநரும் நடிகர் விஜயின் தந்தையுமான எஸ்.ஏ. சந்திரசேகர் பங்கேற்று பேசினார். அவர் பேசும் போது, “ஒரு விஷயத்தை நாம் நேசித்தோம் என்றால் அதன் மீது அன்பு வைத்தோம் என்றால் அது நம்மை கைவிடாது என்றும், அப்படி நாம் சினிமாவை நேசித்த காரணத்தால் அது எப்படியோ நம்மை பிடித்து இழுத்துக் கொண்டே இருக்கிறது எனவும், அதற்காக இந்த இடத்தில் நான் சினிமாவிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றும், நான் நிறைய படங்கள் இயக்கி இருக்கிறேன் நிறைய பணம் சம்பாதித்து இருக்கிறேன் என்றும், ஆனால் தங்கர்பச்சான் போன்று பெயரை சம்பாதிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து பேசுகையில், தங்கர் பச்சான் சினிமாவில் கலப்படமில்லாத ஆர்கானிக் கதைகளை எடுக்கிறார் என்றும், ‘கருமேகங்கள் கலைகின்றன’ படத்தில் தானும் நடித்திருக்கிறேன் என்றும், இந்த வாய்ப்பை கொடுத்த தங்கர் பச்சானுக்கு நன்றி எனவும், தான் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக சேர வேண்டும் என்று ஆசைப்பட்ட சமயத்தில், தனக்கு கொஞ்சம் கோபம் அதிகமாக வரும் என்பதை தெரிந்து கொண்ட பாரதிராஜா நாம் நண்பர்களாகவே இருப்போம் என்று தெரிவித்து தன்னை உதவி இயக்குனராக சேர்க்க மறுத்துவிட்டதாகவும், பின்னர் தானும் இயக்குனராகி காட்டுகிறேன் என்று இயக்குனர் ஆனேன் என்றும் எஸ்.ஏ.சி தெரிவித்தார்.
இதனிடையே, முன்னதாக நடிகர் விஜய் நடிக்க வைக்க ஆசை பட்ட போது தன்னை விட ஒரு பெரிய இயக்குனர் அறிமுகப்படுத்தினால் நன்றாக இருக்கும் என்று நினைத்த சமயத்தில்,விஜயின் ஆல்பம் ஒன்றை ரெடி செய்து தான் நேராக சென்று பாரதிராஜா அலுவலகம் கொடுத்ததாகவும், ஆனால் பாரதிராஜா விஜயை வைத்து படம் இயக்க மாட்டேன் என்பதை மறைமுகமாக தெரிவித்ததாகவும், தான் அவரிடம் இயக்குனராக சேர ஆசைப்பட்டேன் அதுவும் நடக்கவில்லை தன்னுடைய மகனை அவரது இயக்கத்தில் நடிக்க வைக்க ஆசைப்பட்டேன் அதுவும் நடக்கவில்லை என எஸ்.ஏ.சி தெரிவித்தார்.
ஆனால், இயக்குனர் தங்கள் மச்சான் நீண்ட வருடங்களுக்கு பிறகு இப்போது தன்னையும் பாரதிராஜாவையும் இணைத்திருக்கிறார். அதுவும் எப்படி… படத்தில் நண்பர்களாக.. கௌதம் வாசுதேவ் மேனன் இடமும் தான் விஜய்க்காக வாய்ப்பு கேட்டதாகவும், ஆனால் அதுவும் நடக்கவில்லை என்றும், எல்லாம் ஒரு விதத்தில் நல்லது தான். காரணம் தன் கையில் அவன் வந்ததால் தான் அவனை ஒரு கமர்சியல் கதாநாயகனாக மாற்றினேன் என கடவுள் எல்லாவற்றையும் ஒரு திட்டத்தோடு தான் செயல்படுத்துகிறார்” என்று எஸ்.ஏ.சி பேசினார்.