ரேவதியை நம்ப வைத்து ஏமாற்றிய பாரதிராஜா.. ஒருநாள் முழுக்க கதறி அழுத சம்பவம்..!

Author: Vignesh
30 June 2023, 3:00 pm

80ஸ்-களில் நடிகை ரேவதி இளைஞர்கள் மனதில் கனவுக்கன்னியாக இடம்பிடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர். 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் நடித்து வருபவர் நடிகை ரேவதி.

மண்வாசனை, தேவர் மகன், மௌனராகம், புதுமை பெண் என பல சூப்பர்ஹிட் படங்களில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு வெளிவந்த நவரசா ஆந்தாலஜி சீரிஸில் கூட முக்கியமான கதாபாத்திரத்தில் ரேவதி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

revathi - updatenews360.png 2

அந்த காலத்தில் இருந்த பல முன்னணி நடிகர்களுடனும் ஜோடியாக நடித்து வந்த நடிகை ரேவதி. தன்னுடைய கலக்கலான திரைப்படங்களை கொடுத்து வந்த நிலையில், மலையாள இயக்குனரான சுரேஷ் சந்திர மேனன் என்பவரை திருமணம் செய்துகொண்டு, 2013 ஆம் ஆண்டு இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்துப் பெற்றுக் கொண்டனர்.

revathi - updatenews360.png 2

தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் தனது நடிகை ரேவதி நடிப்பால் அசத்தியிருக்கிறார். இந்நிலையில், முதல் படமான மண்வாசனையில் இவரை அறிமுகப்படுத்தி வைத்த இயக்குனர் பாரதிராஜாவுக்கு இடையே பல சலசலப்புகள் நடந்துள்ளது.

அதில், பாரதிராஜா சொன்னபடி பாண்டியன் உண்மையாகவே ரேவதியின் கண்ணத்தில் அறைந்தார் என்றும், இது மிகப்பெரிய பேசும் பொருளாக அந்த சமயத்தில் பார்க்கப்பட்டது.

revathi-updatenews360

இதனிடையே, மற்றும் ஒரு சம்பவம் ஒரு நாள் முழுக்க ரேவதியை அழ வைத்து வேடிக்கை பார்த்து உள்ளாராம் பாரதிராஜா. பொத்தி வச்ச மல்லிகை மொட்டு பாடலின் ஒரு காட்சியில் குளிப்பது போல் காட்சி அமைக்க பட குழு திட்டமிட்டு இருந்த நிலையில், இதற்கு பாரதிராஜா ரேவதியிடம் கிராமத்து பெண்களை போல் ரவிக்கை அணியாமல் மார்புவரை சேலையை கட்டிக்கொண்டு குளிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தாராம்.

revathi-updatenews360

ஆனால், அதற்கு ரேவதி அப்படியெல்லாம் முடியாது என்று அழுது கொண்டு ஒத்த காலில் நின்றதாகவும், இதனால், சிறிது நேரம் படப்பிடிப்பில் தடை ஏற்பட்டதாகவும், பின்னர் பாரதிராஜா தனியாக இல்லாமல் சில பெண்களை கூட்டு சேர்த்து அவர்களுடன் சேர்த்து குளிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

revathi-updatenews360

இதனால் ரேவதி அரை மனதோடு நடிக்க ஒப்புக்கொண்டு விட்டாராம். ரேவதி தனியாக இல்லாமல் கூட்டு, சேர்ந்து குளித்துக் கொண்டிருக்கும் சமயத்தில் பாரதிராஜா அந்த காட்சியை ஒளிப்பதிவு செய்துவிட்டு பின்னர் படத்தை பார்க்கும் போது தான் ரேவதிக்கு விஷயமே தெரிய வந்ததாம். அதில், ரேவதி மட்டும் தனியாக படம் பிடித்துள்ளார் பாரதிராஜா. இதனைப் பார்த்த ரேவதி பாரதிராஜா என்னை நம்ப வைத்து ஏமாற்றி விட்டார் என பேட்டி ஒன்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

revathi-updatenews360
  • Redin Kingsley and Sangeetha Announce Pregnantவீட்டுல விஷேசம்… குட்டி கிங்கிஸ்லி Coming Soon : வெளியான வீடியோ!
  • Views: - 498

    0

    1