“நா ஹார்ட் அட்டாக் வந்து செத்தா” அவதான் காரணம் – பிரபல நடிகையால் மிரண்ட பாரதிராஜா..!

Author: Vignesh
11 April 2023, 10:30 am

தமிழ் சினிமாவில் 16 வயதினிலே என்ற சூப்பர் ஹிட் படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தவர் இயக்குனர் பாரதிராஜா. முதல் படமே பெரியளவில் வரவேற்பு பெற்று அடுத்தடுத்த ஆண்டுகளில் வெற்றிப்படங்களை இயக்கி வெளியிட்டு வந்தார்.

அவர் இயக்கிய படங்களில் நடித்த நடிகர், நடிகைகள் தற்போது தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறக்கும் பிரபலங்களாக இருந்து வருகிறார்கள்.

முன்னணி இயக்குநராக வலம் வரும் இயக்குநர் பாரதிராஜா தற்போது படங்களை இயக்குவதை நிறுத்தி விட்டு தமிழ் சினிமாவில் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இவரது இயக்கத்தில் குஷ்பு கேப்டன் மகள் என்ற படத்தில் நடித்திருந்தார்.

bharathiraja - updatenews360

இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படப்பிடிப்பில் நடந்த சம்பவம் ஒன்றை பகிர்ந்துள்ளார். இயக்குநர் பாரதிராஜாவுக்கு பாம்பை பார்த்தாலே தனக்கு வியர்த்து விறுவிறுக்க ஆரம்பித்துவிடும் அந்த அளவுக்கு பாம்பு மீது பயமாம்.

Kushboo - Updatenews360

ஒய்வில் இருந்தபோது, வேறு ஒரு படப்பிடிப்பிற்காக பல் பிடுங்கப்பட்ட பாம்பு வைக்கப்பட்டு இருந்ததாம். இதற்காக அந்த பல் பிடுங்கப்பட்ட பாம்பை தனது கைகளில் எடுத்துக்கொண்டு பாரதி ராஜாவிடம் சென்று, சார் இங்கே பாருங்க பாம்பு என காட்டியுள்ளார் குஷ்பு. இதனை பார்த்த பாரதிராஜா அரண்டு மிரண்டு ஓட்டம் பிடித்துள்ளார்.

Bharathiraja - Updatenews360

ஒரு கட்டத்தில் படக்குழுவினர் தன்னை நிறுத்தியதையடுத்து ஓட்டத்தை நிறுத்திய பாரதிராஜா, உடல் முழுக்க வியர்த்துப் போய், தான் ஹார்ட் அட்டாக் வந்து செத்தால் அதற்கு அவள்தான் காரணம் என திட்டியதாக தெவித்துள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 629

    1

    0