தமிழ் சினிமாவின் கருப்பு நாள்
தமிழ் சினிமாவில் இயக்குனர் இமயமான பாரதிராஜா குடும்பத்தில் பெரும் துயர சம்பவம் நிகழ்ந்து,அனைவரையும் அதிர்ச்சியாக்கி,சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படியுங்க: தென்னிந்தியா பெஸ்ட்..அங்கே வாழ ஆசை..மும்பையில் சலசலப்பை ஏற்படுத்திய பாலிவுட் நடிகர்.!
பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் மாரடைப்பு ஏற்பட்டு அவருடைய வீட்டிலே இறந்துள்ளார்.48 வயதான மனோஜ் தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்து அதன் பிறகு சினிமாவை விட்டு விலகியே இருந்தார்,இவர் 1999ஆம் ஆண்டு தழில் வெளியான ‘தாஜ்மஹால்’ திரைப்படம் மூலம் அறிமுகம் ஆகி பலருடைய கவனத்தையும் ஈர்த்தார்.
தொடர்ந்து மார்கழி திங்கள்,கடல் பூக்கள்,சமுத்திரம் போன்ற படங்களில் நடித்தாலும் இவரால் பெரிய ஹீரோவாக ஜொலிக்க முடியவில்லை,அதுமட்டுமில்லாமல் குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்த இவர் சினிமாவில் கவனம் செலுத்த தவறிவிட்டார்,இதனால் இவருக்கு பட வாய்ப்புகள் ஏதும் இல்லாமல் இருந்த இடம் தெரியாமல் இருந்தார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு சிம்பு நடிப்பில் வெளியான ஈஸ்வரன்,மாநாடு திரைப்படத்தில் முக்கிய ரோலில் நடித்திருப்பார்,இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார்.
சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அவர் ஓய்வில் இருந்த போது,அவருடைய இல்லத்திலே இன்று அவருடைய உயிர் பிரிந்துள்ளது,இதனால் பாரதிராஜா குடும்பம் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளது.
தற்போது சேப்பாக்கத்தில் உள்ள மனோஜின் இல்லத்திற்கு திரையுலக பிரபலங்கள், பொதுமக்கள் பலர் நேரில் சென்று பாரதிராஜாவுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
ஏற்கனவே இன்று அதிகாலை நடிகரும்,கராத்தே வீரருமான ஷிகான் ஹுசைனி புற்றுநோயால் இறந்த நிலையில்,தற்போது நடிகர் மனோஜின் மரணம் ரசிகர்களை அதிர்ச்சியாக்கி,தமிழ் சினிமாவில் கருப்பு நாளாக அமைந்துள்ளது.