பிரபல இயக்குனரின் வீட்டு வாசலில் வாய்ப்புக்காக காத்துக்கிடந்த மணிவண்ணன் – திறமை பார்த்து திணறிப்போன ஜாம்பவான்!

Author: Shree
14 June 2023, 1:02 pm

தமிழ் சினிமாவின் பிரபலமான திரைப்பட நடிகரும், இயக்குநரும், தமிழுணர்வாளரும் ஆன மணிவண்ணன் 400கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் சுமார் 50 திரைப்படங்களை இயக்கியும் உள்ளார். 1978ல் வெளிவந்த கிழக்கே போகும் ரயில் திரைப்படம் ஏற்படுத்திய தாக்கத்தால் ஈர்க்கப்பட்ட இவர், பாரதிராஜாவின் உதவியாளராக சினிமா பணியை துவங்கினார்.

தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகர்களான சிவாஜி கணேசன், கமல்ஹாசன், ரஜினிகாந்த் , சத்யராஜ், கார்த்திக், மோகன், மாதவன், விஜய், அஜித் குமார், சூர்யா உள்ளிட்ட பல நட்சத்திரங்களுடன் இவர் நடித்திருந்தார். இந்நிலையில் மணிவண்ணன் பிளாஷ்பேக் குறித்த ஸ்வாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

ஆம், மணிவண்ணன் முதன் முதலில் இயக்குனர் ஆகவேண்டும் என வாய்ப்பு தேடி பாரதிராஜாவின் வீடு வாசலில் காலையிலே சென்று காத்துக்கிடந்து பாரதிராஜாவின் கார் வெளியில் வரும் போது அவருக்கு வணக்கம் வைப்பாராம். இப்படி தொடர்ந்து பல நாட்கள் செய்துவந்துள்ளார். அதை கவனித்து வந்த பாரதிராஜாவின் மனைவி மணிவண்ணனை அழைத்து கேட்டதற்கு கையில் பாரதிராஜா படத்தின் ஸ்க்ரிப்ட்டை ஒரு வரி விடாமல் எழுதி வைத்திருந்ததை காட்ட திறமையை பார்த்து பிரம்மித்துப்போய் கணவரிடம் சிபாரிசு செய்து வாய்ப்பு கொடுத்தாராம்.

அதன் பின்னர் பாரதிராவுக்கு பல உதவிகள் செய்து அவருடனேயே இருந்து உதவி இயக்குனராக வேலை பார்த்து கொஞ்சம் கொஞ்சமாக படம் இயக்கும் நுணுக்கங்களை தெரிந்துக்கொண்டு வாய்ப்பு வாங்கி முன்னேறினாராம். அதன் பின்னர் மணிவண்ணன் பாரதிராஜாவை கடவுளாக பார்த்தாராம்.

  • ajith kumar changed the lyrics of god bless u song in good bad ugly அது வேண்டாம் இதை வச்சிக்கோ- இந்த பாடல் வரியை மாற்றியது அஜித்தா?