ஐஸ்வர்யா ராயிடம் 100 ரூபாய் சம்பள பாக்கி – படப்பிடிப்பிலே சொல்லிக்காட்டிய ரஜினி!

Author: Shree
17 November 2023, 11:26 am

இந்திய சினிமாவின் முன்னணி நடிகையும் உலக சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராகவும் பார்க்கப்படுபவர் நடிகை ஐஸ்வர்யா ராய். உலக அழகி என பலரும் பட்டம் பெற்றாலும் இன்றும் ‘உலக அழகி’ என சொன்னால் முதலில் நமது நியாபகத்துக்கு வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராய் தான்.

குறிப்பாக 90ஸ் கிட்ஸ்களுக்கு எவ்வளவோ நல்ல பேவரைட் ஹீரோயின்ஸ் இருந்தாலும், கனவு கன்னியாக இன்னும் மனதில் நிலைத்திருப்பவர் ஐஸ்வர்யா ராய். ஹிந்தி மற்றும் தமிழ் மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில், இருவர், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஜீன்ஸ், குரு, எந்திரன் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாரானா அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை காதலித்து 2007ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஆராதியா பச்சன் என்ற மகளும் உள்ளார். இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால் எந்திரன் படத்தில் நடித்தபோது அப்படத்தின் உதவி இயக்குனராக பாரதிராஜாவின் மகன் மனோஜ் பணியாற்றியுள்ளார்.

அப்போது ரஜினி அவரை ஐஸ்வர்யா ராயிடம் இவர் தான் பாரதிராஜாவின் மகன் எனக்கூறி அறிமுகம் செய்துள்ளார். பதிலுக்கு வெல்கம் செய்த ஐஸ்வர்யா ராயிடம் ரஜினிகாந்த், இவருடைய அப்பா பாரதிராஜா நான் 16 வயதினிலே படத்தில் நடித்தபோது ரூ.100 சம்பள பாக்கி தரவேண்டும். அதை இன்றுவரை தரவே இல்லை என கூறினாராம். உடனே அங்கிருந்தவர்கள் அனைவரும் சிரித்துள்ளனர். இந்த சம்பவம் பாரதிராஜா காதுக்கு எட்ட அவரும் விழுந்து விழுந்து சிரித்தாராம்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 372

    0

    0