கவர்ச்சி பாட்டு கேட்டு மஜா செய்த பாரதிராஜா : படப்பிடிப்பில் நடந்த கூத்து.. அப்செட்டான படக்குழு!!

Author: Udayachandran RadhaKrishnan
30 December 2022, 4:02 pm

நடிகர் அருள்நிதி நடிக்கும் படம் தான் திருக்குறள். இந்த படத்தின் படப்பிடிப்பு படுவேகமான நடந்து வருகிறது. இதில் இயக்குனர் பாரதிராஜாவும் நடிக்கிறார்.

கடந்த 2 தினங்களுக்கு முன்னர் ஒரு சோகமான காட்சி ஒன்றை படமாக்கிக் கொண்டு இருந்தார்கள். அதில் அருள்நிதி மண்ணீர் மல்க நடித்துக் கொண்டு இருந்தாராம். செட்டே அமைதியாகி விட்டது. அங்கே நிசப்த்தமாக இருந்தது. அனைவரும் மிக உண்ணிப்பாக அருள்நிதியின் நடிப்பை கவனித்துக்கொண்டு இருந்தவேளை அது.

குண்டூசி விழும் சத்தம் கூட கேட்க்காத நிலையில், திடீரென ஓ சொல்றியா மாமா… இல்லை ஓஓ சொல்றியா மாமா என்ற பாட்டு கேட்டுள்ளது.

திடீரென கேட்ட இந்த பாடலால் அனைவரும் திகைத்துப் போய் விட்டார்கள். என்ன ஒரு சோகமான கட்டத்தை படமாக்கிக் கொண்டு இருக்கிறோம். இந்த நேரத்தில் ஓ சொல்றியா மாமா பாட்டா ? என்று இயக்குனர் குழம்பி விட்டார். பாட்டை யார் போட்டது என்று கேட்டுக் கொண்டே கையை ஓங்கி அடிக்கப் போவது போல அவர் செல்ல…

அங்கே பார்த்தால் இயக்குனர் பாரதிராஜா தான் அந்தப் பாடலைக் மோபைல் போனில் கேட்டுக் கொண்டு கையை அசைத்து ஆடிக்கொண்டு இருந்துள்ளார். அட இவரா ? என்று அனைவரும் அதிர்ந்து போய் விட்டார்கள்.

பாரதிராஜாவை என்ன செய்ய முடியும் ? ஆனால் படப்பிடிப்பு நடக்கும் Shooting Spot ல் இவர் ஒரு குழந்தையைப் போலவே இருந்து வருகிறார் என்கிறார்கள் விடையம் அறிந்த வட்டாரத்தினர்.

  • ajith-sir-gives-the-title-good-bad-ugly-said-by-adhik-ravichandran டைட்டில் வச்சதே அஜித்சார்தான்- ஆச்சரிய தகவலை பகிர்ந்த ஆதிக் ரவிச்சந்திரன்