“என் நண்பனுக்கு எப்படி ஆறுதல் சொல்வேன்” – கலங்கி அழும் பாரதிராஜா !
Author: Rajesh25 January 2024, 10:39 pm
தமிழ் சினிமாவின் தலைமுறைக்கும் பேசும், பேசப்போகும் இசை அரசனாக பார்க்கப்படுபவர் இசைஞானி இளையராஜா. இவர் அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் 1976 இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் 1000த்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார். தமிழின் நாட்டுப்புற இசையினை அதன் தரம் குறையாமல் வழங்குவதில் அவர் ஞானி.

இனிமையான பாடலுக்கு கோடிக்கணக்கான ரசிகர்களை தன்வசப்படுத்துயிருக்கும் இளையராஜாவுக்கு கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா , பவதாரிணி என மூன்று பிள்ளைகள் உள்ளனர். இதில் பவதாரிணி பாடகியாகவும், இசையமைப்பாளராகவும் இருந்து வந்தார். இதனிடையே அவர் இன்று மாலை 5.20 மணிக்கு திடீரென மரணமடைந்துள்ளார்.
இந்த செய்தி ஒட்டுமொத்த திரையுலகினரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது . பாடகி பவதாரிணி கடந்த சில ஆண்டுகளாக புற்று நோயால் பாதிக்கப்பட்டு தொடர்ந்து உயர்தர சிகிச்சை எடுத்து வந்துள்ளார். இதனிடையே “ஆயுர்வேத சிகிச்சை”க்காக குடும்பத்தினர் அவரை இலங்கைக்கு சென்ற நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி திடீரென மரணித்துள்ளதாக வெளிவரும் செய்திகள் கூறுகிறது.

இதையடுத்து பல்வேறு திரைபிரபலங்கள் பாடகி பவதாரிணியின் மரண செய்தி கேட்டு பேரதிர்ச்சிக்குள்ளாகிவிட்டனர். தொடர்ந்து இளையராஜா குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் தற்ப்போது திரைப்பட இயக்குனரும் இளையராஜாவின் நெருங்கிய நண்பருமான பாரதி ராஜா பதிவிட்டுள்ள இரங்கல் செய்தியில், ” என் நண்பனுக்கு எப்படி ஆறுதல் சொல்வேன். மகள் பவதாரணியின் மறைவு எங்கள் குடும்பத்திற்கு ஈடு செய்யமுடியாத இழப்பாகும்” என மிகுந்த வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.