கணவருடன் பிரிந்துவிட்டாரா பாவனா
நடிகை பாவனா மலையாளம்,தமிழ்,கன்னட திரைப்படங்களில் நடித்துவரும் பிரபல நடிகையாவார்.இவர் 2018ஆம் ஆண்டு,கன்னடத் திரைப்பட தயாரிப்பாளர் நவீனை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இதையும் படியுங்க: IPL கிங்குடா.!38 ரன் தான்..கோலி படைக்க இருக்கும் புது ரெகார்ட்.!
சமீபகாலமாக,பாவனா தனது சமூக வலைதளங்களில் கணவர் பற்றிய எந்தப் பதிவுகளையும் பகிரவில்லை.இதனால்,அவர்களின் திருமண வாழ்க்கையில் பிரச்சனை ஏற்பட்டதாகவும்,அவர்கள் பிரிந்து வாழ்கிறார்கள் போன்ற வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவி வந்தன.
இந்த தகவல்களுக்கு பதிலளித்துள்ள பாவனா இதில் எந்த உண்மையும் இல்லை.சிலர் வேண்டுமென்றே இத்தகைய தவறான தகவல்களை பரப்புகின்றனர்,எனது தனிப்பட்ட வாழ்க்கையை சமூக வலைதளங்களில் பகிர்வதை நான் விரும்பவில்லை.
அதனால் எனது கணவருடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிடாமல் இருக்கிறேன்,எங்கள் திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.