இந்த பாட்டை மறக்கவே முடியாது.. பவதாரிணியின் மறைவு குறித்து சிம்பு உருக்கமான இரங்கல்..!
Author: Vignesh26 January 2024, 8:05 am
தமிழ் சினிமாவின் தலைமுறைக்கும் பேசும், பேசப்போகும் இசை அரசனாக பார்க்கப்படுபவர் இசைஞானி இளையராஜா. இவர் அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் 1976 இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் 1000த்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார். தமிழின் நாட்டுப்புற இசையினை அதன் தரம் குறையாமல் வழங்குவதில் அவர் ஞானி.
இனிமையான பாடலுக்கு கோடிக்கணக்கான ரசிகர்களை தன்வசப்படுத்துயிருக்கும் இளையராஜாவுக்கு கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா , பவதாரிணி என மூன்று பிள்ளைகள் உள்ளனர். இதில் பவதாரிணி பாடகியாகவும், இசையமைப்பாளராகவும் இருந்து வந்தார். இதனிடையே அவர் நேற்று மாலை 5.20 மணிக்கு திடீரென மரணமடைந்துள்ளார்.
இந்த செய்தி ஒட்டுமொத்த திரையுலகினரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது . பாடகி பவதாரிணி கடந்த சில ஆண்டுகளாக புற்று நோயால் பாதிக்கப்பட்டு தொடர்ந்து உயர்தர சிகிச்சை எடுத்து வந்துள்ளார். இதனிடையே “ஆயுர்வேத சிகிச்சை”க்காக குடும்பத்தினர் இலங்கைக்கு அழைத்து சென்ற நிலையில், தான் உயிர் பிரிந்தது. இதையடுத்து, பவதாரணையின் உடல் இலங்கையில் இருந்து இன்று மாலை சென்னைக்கு கொண்டுவரப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, இறுதி சடங்குகள் நடைபெற உள்ளன.
இதையடுத்து, பல்வேறு திரைபிரபலங்கள் பாடகி பவதாரிணியின் மரண செய்தி கேட்டு பேரதிர்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து இளையராஜா குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், தற்போது நடிகர் சிம்பு பவதாரணி மறைவு குறித்து உருக்கமாக எக்ஸ் தளத்தில் இரங்கலை தெரிவித்து இருக்கிறார். அதில், மாநாடு படத்தில் வரும் மாஷா அல்லா பாடலை பவதாரணி பாடியிருந்தார் அவரது குரல் மக்கள் இதயங்களில் இருந்து எப்போதும் மறையாது என சிம்பு தெரிவித்துள்ளார்.
The voice that forever lives in the heart of people for its innocence and love! You were a pure soul! Gone too soon! I pray to God to give strength to the family of Illayaraja sir and my brother @thisisysr at this moment! Rest in peace Bhavatharini. ?#Bhavatharini #RIP pic.twitter.com/PO3ArYGq49
— Silambarasan TR (@SilambarasanTR_) January 25, 2024