தமிழ் சினிமாவின் தலைமுறைக்கும் பேசும், பேசப்போகும் இசை அரசனாக பார்க்கப்படுபவர் இசைஞானி இளையராஜா. இவர் அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் 1976 இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் 1000த்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார். தமிழின் நாட்டுப்புற இசையினை அதன் தரம் குறையாமல் வழங்குவதில் அவர் ஞானி.
இனிமையான பாடலுக்கு கோடிக்கணக்கான ரசிகர்களை தன்வசப்படுத்துயிருக்கும் இளையராஜாவுக்கு கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா , பவதாரிணி என மூன்று பிள்ளைகள் உள்ளனர். இதில் பவதாரிணி பாடகியாகவும், இசையமைப்பாளராகவும் இருந்து வந்தார். இதனிடையே அவர் நேற்று மாலை 5.20 மணிக்கு திடீரென மரணமடைந்துள்ளார்.
இந்த செய்தி ஒட்டுமொத்த திரையுலகினரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது . பாடகி பவதாரிணி கடந்த சில ஆண்டுகளாக புற்று நோயால் பாதிக்கப்பட்டு தொடர்ந்து உயர்தர சிகிச்சை எடுத்து வந்துள்ளார். இதனிடையே “ஆயுர்வேத சிகிச்சை”க்காக குடும்பத்தினர் அவரை இலங்கைக்கு சென்ற நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி திடீரென மரணித்துள்ளார்.
இதையடுத்து பல்வேறு திரைபிரபலங்கள் பாடகி பவதாரிணியின் மரண செய்தி கேட்டு பேரதிர்ச்சிக்குள்ளாகிவிட்டனர். தொடர்ந்து இளையராஜா குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் பவதாரிணி சில நாட்களுக்கு முன் பேட்டி ஒன்றில் தனது அப்பா இளையராஜா குறித்து பேசியுள்ளது தற்ப்போது வைரலாகி வருகிறது.
அதாவது, என்னுடைய அப்பா ரொம்பவே ஸ்ட்ரிக்ட் என் அண்னன் கார்த்திக் ராஜாவிடம் இசை பற்றி நிறைய பேசுவார். அவரிடம் நிறைய கரெக்ஷன்ஸ் கூறுவார். ஆனால், தம்பி யுவன் மற்றும் என்னிடம் இசையை பற்றி நிறைய பேசமாட்டார். எப்போதுமே சாப்பிடும் போது டைனிங் டேபிளில் தான் இசை கம்போஸிங் பற்றி யுவன், கார்த்திக் இருவருமே அப்பாவிடம் பேசுவார்கள்.
அவர்கள் பேச ஆரம்பித்து விட்டால் போதும் எனக்கு ஒரே மன உளைச்சலாக மாறிவிடும். சகோதரர்களின் இசையில் உள்ள குறைகளை சுட்டிக் காட்டி கறாராக கரெக்ஷன்ஸ் கூறுவார். இந்த வரிகள் எல்லாம் வேண்டாம் நெகட்டிவாக இருக்கு என பல கரெக்ஷன்கள் சொல்வார். அந்த சமயத்தில் சாப்பிட கூட விடமாட்டாரங்களே என மிகுந்த மன உளைச்சலாக இருக்கும். அந்த இடமே ஒரு போர்க்களம் போல மாறிவிடும் என பவதாரிணி தனது பழைய பேட்டியில் பேசியிருந்தார். தற்போது அது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சென்னையில், இன்று (பிப்.26) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 25 ரூபாய் குறைந்து 8 ஆயிரத்து 50 ரூபாய்க்கு…
தவெக இரண்டாம் ஆண்டு துவக்க விழா மாமல்லபுரம் அருகே பிரமாண்டமாக நடைபெற உள்ள நிலையில், விஜய் முக்கிய அறிவிப்புகளை வெளியிட…
முதல்வரே தமிழகத்தில் மூன்றாவது மொழி என்னவென்று முடிவெடுக்க முடியாது, பெற்றோர் ஆசிரியர் கழகம் தான் முடிவெடுக்கும் என அண்ணாமலை கூறியுள்ளார்.…
கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…
ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…
This website uses cookies.