வைரலாகும் பிக் பாஸ் வின்னர் அர்ச்சனா வீடியோ…ரசிகர்கள் கொண்டாட்டம்..!
Author: Selvan12 November 2024, 1:49 pm
நடிகை அர்ச்சனா
சமீபத்தில் நடிகை ஓவியா வீடியோ வைரலாகும் நிலையில் தற்போது பிக் பாஸ் 7வது சீசன் வின்னர் அர்ச்சனா வீடியோவை மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் வைல்ட் கார்டு ரவுண்டில் உள்ளே நுழைந்து,மக்கள் அனைவரையும் கவர்ந்து அந்த சீசனில் டைட்டில் வின்னராக வந்தவர் அர்ச்சனா.
அதன் பின்பு டிமான்டி காலனி 2 படத்தில் நடித்தார். அந்த படமும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வசூலை அள்ளியது.
பிறந்த நாள் கொண்டாட்டம்
இந்நிலையில் தன்னுடைய 27 வது பிறந்த நாள் அன்று வீடியோ வெளியிட்டு ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார்.
அதில் அவர் தன்னுடைய வாயில் மெழுகுவர்த்தியை வைத்து ஸ்டைலா சிகரெட் பற்ற வைப்பது போல் பற்ற வைத்து அதை கேக் மீது வைத்து கேக் கட் பண்ணியுள்ளார்.இந்த வீடியோவை தன்னுடைய சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தார்.
இதை பார்த்த ரசிகர்கள் அர்ச்சனாக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.