காதலனை அறிவித்த பிக் பாஸ் ஜாக்குலின்…போட்டோவுக்கு குவியும் வாழ்த்து.!

Author: Selvan
14 February 2025, 3:58 pm

வைரலாகும் ஜாக்குலின் இன்ஸ்டா பதிவு

இன்று உலகம் முழுவதும் காதலர் தினத்தை பலரும் வெகு விமர்சியாக கொண்டாடி வருகின்றனர்.இந்த நிலையில் பிக் பாஸ் பிரபலம் ஜாக்குலின் தன்னுடைய காதலரின் போட்டாவை இன்ஸ்டாவில் பதிவிட்டு உள்ளார்.

இதையும் படியுங்க: இயக்குநருடன் டேட்டிங்…? வசமாக சிக்கிய சமந்தா.. வைரலாகும் போட்டோஸ்!

விஜய் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பளராக தன்னுடைய பயணத்தை ஆரம்பித்து,பின்பு சின்னத்திரையில் அறிமுகம் ஆனார் ஜாக்குலின்,தன்னுடைய திறமையால் மெல்ல மெல்ல வெள்ளித்திரையிலும் சின்ன சின்ன ரோலில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வந்தார்.

Bigg Boss Jacqueline Love Story

சமீபத்தில் பிக் பாஸ் சீசன் 8-யில் போட்டியாளராக கலந்து கொண்டு,ஏகப்பட்ட ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.இந்த நிலையில் திடீரென தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் தனது காதலருடன் இருக்கும் போட்டாவை பகிர்ந்து அதற்கு நீ தானே எந்தன் பொன் வசந்தம் என்ற பாட்டை வைத்து தனது காதலருக்கு காதலர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இவருடைய காதலரான யுவராஜ் செல்வநம்பி தற்போது கேமராமேன் ஆக வேலை பார்த்து வருகிறார்,விரைவில் இவர்கள் இருவரும் திருமணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.தற்போது இந்த போட்டோவிற்கு ரசிகர்கள் பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

  • Lollu Sabha actor Srigo Udhay health update பெரும் சோகம்…பரிதாப நிலையில் லொள்ளு சபா காமெடி நடிகர்..!
  • Leave a Reply