இந்த முறை எல்லாமே வித்யாசம் தான்…. இரண்டு பேர் டைட்டில் வின்னர் – சுவாரஸ்யத்தை தூண்டும் Promo!

Author: Shree
26 September 2023, 6:41 pm

இந்திய தொலைக்காட்சிகளில் பல மொழிகளில் பரவலாக ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ தமிழில் இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளது கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சிக்கு பெருவாரியான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது அடுத்த சீசனாக பிக்பாஸ் 7 நிகழ்ச்சி துவங்க உள்ளனர். அதற்கான வேளைகளில் பிக்பாஸ் குழு மும்முரமாக இறங்கியுள்ளது. இந்த முறை யார் யாரெல்லாம் பங்கேற்க உள்ளார்கள் என்பதை கொஞ்சம் பொறுத்திருந்து பார்க்கலாம். கடைசியாக முகமது அசீம் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால் அதை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

bigg boss 7 tamil-updatenews360

தற்போது அடுத்த சீசனுக்கான துவக்க வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனும் மற்ற சீசன்களை போலவே சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் இருக்கவேண்டும் என்பதற்காக பார்த்து பார்த்து போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்களாம்.

இந்நிலையில் பிக்பாஸ் 7 குறித்து ஜிபி முத்து பேசும் ப்ரோமோ வீடியோ ஒன்றை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. அதில் அவர் பிக்பாஸ் 7ல் உள்ள சிறப்பம்சங்கள் குறித்து சுவாரஸ்யமான லெட்டர் ஒன்றை படிக்கிறார். இரண்டு வீடா? ஒரு வீட்டையே சமாளிக்க முடியாது இதுல ரெண்டு வேறயா? அப்படின்னா கமல் சனிக்கிழமை ஒரு வீட்டில் பேசிவிட்டு ஞாயிற்றுக்கிழமை இன்னொரு வீட்டில் பேசுவாரா? அப்போ இந்த சீசன் இரண்டு டைட்டில் வின்னர் இருப்பார்களா? என்றும் காமெடியாக ஜிபி முத்து தனக்கே உரித்தான பாணியில் கேட்டிருக்கிறார். இதோ அந்த வீடியோ:

  • ajith kumar receive padma bhushan award from president நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!