பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று ஒளிபரப்பாகும் எபிசோடின் இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதில் அஸீம் மற்றும் விக்ரமன் இடையே வாக்குவாதம் நடக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.
விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி தொடங்கியது. இதில் ஜி.பி.முத்து, பாடகர் அசல் கோலார், ராபர்ட் மாஸ்டர், திருநங்கை ஷிவின் கணேசன் , சாந்தி அரவிந்த், சீரியல் நடிகர் முகம்மது அஸீம், சீரியல் நடிகை ஆயிஷா, ஷெரின் ஷாம், மணிகண்ட ராஜேஷ், சரவணன் மீனாட்சி ரக்ஷிதா, ராம் ராமசாமி, பாடகர் தினேஷ் கனகரத்தினம் , விஜே மகேஸ்வரி, அமுதவாணன், நடனக் கலைஞர் மணிச்சந்திரா, விஜே கதிரவன், நடிகை குயின்ஸி, சிங்கப்பூர் மாடல் நிவாசினி, டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, விசிக மாநில செய்தி தொடர்பாளர் விக்ரமன்,மைனா நந்தினி ஆகியோர் பங்கெடுத்துள்ளனர்.
முதல் வாரம் நட்பு..அதன் பின் வஞ்சகம்…தொடர்ந்து பழி தீர்த்தல் என போகும் பிக்பாஸ் வீடு இந்த முறை கொஞ்சம் அப்டேட்டாக தினம் தினம் பஞ்சாயத்துடன் தான் விடிகிறது. எபிசோடு ப்ரோமோ வந்தாலே யார் யாருக்கு சண்டை என்ற ஆர்வத்திலே பலபேர் பார்க்கும் அளவுக்கு இருக்கும். அந்த வகையில் முதல் வாரம் ஜிபி முத்து – தனலட்சுமி, நேற்று தனலட்சுமி – அசல் கோலார், விக்ரமன் – அஸீம், விக்ரமன் -ஜிபி முத்து என இந்த வார்த்தை மோதல்கள் ரவுண்டு கட்டி விளையாண்டது.
இன்று காலை வெளியான முதல் ப்ரோமோவில் ஆயிஷாவை எதற்கும் தகுதி இல்லை என அஸீம் கூறினார். இதுதொடர்பாக இருவருக்குள்ளும் வாக்குவாதம் நடந்த போது அஸீம் ஆயிஷாவை போடி என மரியாதை இல்லாமல் பேச இருவருக்குள்ளும் சண்டை நிகழ்ந்தது. இதேபோல் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் அஸீம் விக்ரமனையும் தகுதி இல்லை என கூற அவர் நீங்க என்ன வேலைப் பார்த்திங்க என திரும்பி கேட்கிறார்.
அதற்கு யோவ் நீங்க தான் ஜெயில்ல தூங்கிட்டு இருந்தீங்க. நான் இல்ல என அஸீம் சொல்ல, மரியாதையா பேசுங்க என விக்ரமன் எச்சரிக்கிறார். உடனே அஸிம் டென்ஷனாகி டேய் உன் வேலையை பாருடா போய் என தெரிவிக்க இருவருக்குள்ளும் சண்டை ஏற்படுகிறது. அப்போது விக்ரமன் அஸிமை பார்த்து பெரிய இளவரசன் மாதிரி வர்ற, போற..வாடா போடான்னு எல்லோரையும் சொல்லுற என தெரிவிக்கிறார்.
உடனே அஸிம் வெள்ளை சட்டைப் போட்டா என்ன பெரிய அரசியல்வாதின்னு சொல்றீங்க எனக்கு சத்தியமா புரியல என வார்த்தைகளை அள்ளி வீசுகிறார். இதனால் இன்றைய எபிசோடு ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.