ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன பிக்பாஸ் டைட்டில் வின்னர்.. தீயாக பரவும் புகைப்படம்..!
Author: Vignesh13 December 2023, 1:00 pm
விஜய் டிவியில் கடந்த 6 ஆண்டுகளாக உலக நாயகன் கமல் ஹாசனால் தொகுத்து வழங்கப்பட்டு வந்த நிகழ்ச்சி பிக்பாஸ். தற்போது பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த ஆண்டு முடிந்த பிக்பாஸ் சீசன் 6 டைட்டில் வின்னராக அசீம் கைப்பற்றி இருந்தார். ஆனால் டைட்டில் வின் பண்ணினாலும் சினிமாவில் வாய்ப்பு கிடக்காமல் இருந்து வருகிறார். இவரை போன்றே டைட்டில் வின் செய்தும் வாய்ப்பு கிடைக்காமல் காணாமல் போனவர்களும் இருக்கிறார்கள்.
சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 6ன் டைட்டில் வின்னரான அசீம் சீரியல் நடிகராக இருந்து வந்தபோது கொஞ்சம் நல்ல பெயரை பெற்று வந்தார். ஆனால் நிகழ்ச்சிக்கு பின் சில சர்சசைகளில் சிக்கி பெயரை கெடுத்துகொண்டதோடு படவாய்ப்பினை பெறாமல் பத்துபைசாவுக்கு பிரயோஜனம் இல்லாமல் மாறிவிட்டது குறிப்பிடத்தக்கது.
அசீம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பின்னர் திரைப்படங்களில் நடிக்க போவதாக தகவல் வெளியாகிய நிலையில் இது தொடர்பான அதிகார பூர்வமான தகவல்கள் இதுவரையில் வெளியாகவில்லை. இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அசீம் சமிபத்தில் சில புகைப்படங்களை பகிர்ந்து இருந்தார். அந்த புகைப்படங்களில் பார்க்கும் பொழுது அசீம் தலைமுடி வளர்த்து ஆளே மாறிவிட்டார். மேலும் அவரின் ரசிகர்கள், “ இது நம்ம அசீமா?” என கருத்துக்களை பகிர்ந்து உள்ளனர்.