Bully Gangஐ தெறிக்கவிட்ட அர்ச்சனா.. சப்போர்ட்டாக களமிறங்கிய பிக்பாஸ் முன்னாள் டைட்டில் வின்னர்..!

Author: Vignesh
8 November 2023, 3:00 pm

பிக் பாஸ் வீட்டில் நேற்றைய எபிசோடு மட்டும் ஒரே நாளில் எவ்வளவு கண்டன்ட் கிடைச்சா.. என்ன பண்றது என்கிற மூடில் பிக் பாஸ் எடிட்டர்கள் திணறிப் போகும் அளவிற்கு நேற்றைய சம்பவங்கள் இருந்தது.

குறிப்பாக பிக் பாஸ் வைல்காடு என்ட்ரியா வந்த அர்ச்சனா முதல் சில நாட்கள் அழுது கொண்டே இருந்த நிலையில், கமலஹாசன் மற்றும் பிக் பாஸ் அறிவுரைக்குப் பின்னர் தற்போது களத்தில் குதித்துள்ளார். அதாவது, பிரதீப் இருந்திருந்தால் கூட மாயா பூர்ணிமாவை இந்த அளவிற்கு கதற விட்டிருப்பாரா என்று கேட்கும் அளவிற்கு அவர் விட்டு சென்ற வேலையை அர்ச்சனா செய்துள்ளார்.

அதாவது, ஸ்மால் பாஸ் வீட்டில் உள்ளவர்களை கேப்டன் பொறுப்பில் இருக்கும் மாயா அலட்சியப்படுத்தி வரும் நிலையில், அவருக்கு சரியான பதிலடியை அர்ச்சனாவும், விசித்திராவும் கொடுத்துள்ளனர்.

ஒருவேளை மாயா டைட்டிலை வென்று விட்டால் இத்தனை பேரை எமோஷனலாக காலி பண்ணிட்டு இந்த டைட்டிலை பெறுகிறோம் என்ற குற்ற உணர்வு இருக்காதா என்று கேள்வி எழுப்பி உள்ளார். மேலும், மாயா கேப்டன் ஆக வந்தால் சரியாக போட்டியாளர்களை ஹேண்டில் பண்ணுவார் என்று நினைத்தேன். ஆனால், அவர் இப்படி நடப்பார் என்று நான் நினைக்கவே இல்லை. ரொம்ப சீப்பா நடந்து கொள்கிறார் என்று ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.

இவர்களுக்கும் ரெட் கார்டு வாங்கி போனவருக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்று அர்ச்சனா ஆவேசமாக கூறும் வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இதனை பார்த்த நெட்டிசன்கள் அர்ச்சனா ஃபுல் பார்மில் தற்போது, அந்நியனாக மாறியிருப்பதாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மாயா பூர்ணிமா டீமுக்கு எதிராக தற்போது அர்ச்சனா களம் இறங்கி இருக்கிறார். அதனால், அவருக்கு நாளுக்கு நாள் வெளியில் ஆதரவு கூடி வருகிறது. இந்நிலையில், அர்ச்சனாவுக்கு பிக் பாஸ் முன்னாள் டைட்டில் வின்னர் ஆரி ஆதரவு தெரிவித்து இருக்கிறார். அவர் எக்ஸ் வலைதளத்தில் அர்ச்சனாவுக்கு ஆதரவு தெரிவித்து குறிப்பிட்டுள்ளார்.

  • Premgi Amaren marriage newsநடிகர் பிரேம்ஜிக்கு இப்படி ஒரு பிரச்சனையா..மனைவி சொன்ன அதிர்ச்சி தகவல்..!
  • Views: - 427

    0

    0