கள்ளிப்பால் ஊத்தி கொன்னிருக்கணுமா.. நிக்சனை லெப்ட், ரைட் வாங்கிய போட்டியாளரின் அப்பா..!

Author: Vignesh
20 December 2023, 10:45 am

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 7 நிகழ்ச்சிகள் போட்டியாளர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தது தான் ஃப்ரீஸ் டாக்ஸ். இதில், முதலில் வந்த பூர்ணிமாவின் அம்மா போட்டியாளர்களுடன் மிகவும் கலகலப்பாக பேசினார்.

அதன் பின்னர் அர்ச்சனாவின் அம்மாவும் அப்பாவும் வந்தார்கள். தன் மகள் நடந்து கொண்ட விதத்திற்காக விசித்ராவிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்கள்.

bigg boss 7 tamil-updatenews360

மேலும், பல்வேறு விஷயங்களைப் பற்றி அர்ச்சனாவின் அப்பா ரவிச்சந்திரன் பேசியிருந்தார். அர்ச்சனா மற்றும் நிக்ஸன் இடையே நடந்த சண்டை பற்றி பேசியபோது நிக்ஸன் நல்லவர்தான் கோபம்தான் அவரை இப்படி ஆக்குகிறது என்று தெரிவித்திருந்தார்.

bigg boss 7 tamil-updatenews360

மேலும், சண்டை முடிந்தபின் வேறு ஒருவரிடம் பேசும் போது சின்ன வயசிலேயே இதை கள்ளிப்பால் ஊத்திக் கொண்ணு இருக்கணும் என்று சொன்னீங்க அது ரொம்ப தப்பு என்றும் மிகவும் வருத்தமாக இருந்தது என அர்ச்சனாவின் அப்பா வெளிப்படையாக கூறியுள்ளார். நிக்ஸன் எதுவும் தெரியாதது போல் சமாளித்தார். மேலும், அர்ச்சனா பாத்ரூமில் அழுது கொண்டிருக்கும் போது விக்ரம் அவரை கிண்டல் செய்து காட்டிய ரியாக்ஷன் பற்றியும் அர்ச்சனாவின் அப்பா பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

  • vaadivaasal movie shooting starts on august ஒரு வழியாக தொடங்கப்போகுது வாடிவாசல்? ஒரு படத்துக்கு இவ்வளவு இழுபறியா?