ஆண்டவரே இதையாச்சும் கேப்பீங்களா? வெளியே போய் அவனை வச்சுகிறேன்.. மிரட்டல் விடுத்த மாயா..!

Author: Vignesh
5 December 2023, 1:15 pm

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக மாயா ஃபேமஸானார். ஆனால், அது நல்ல பெயரை எடுத்து ஃபேமஸாசாகவில்லை. பிரதீப்புக்கு எதிராக ரெட்கார்ட் கொடுத்தும், அவரை கழுவி ஊற்றியதால் மாயா ஃபேமஸ் அடைந்தார்.

வாரவாரம் பல இடங்களில் ரூல்ஸ் மீறும் மாயாவை கமல் ஒரு வார்த்தை கூட கேட்பதில்லை என நெட்டிஷன்கள் மிகவும் வருத்தப்பட்டு வருகின்றனர்.

bigg boss 7 tamil-updatenews360

இந்நிலையில், மாயா பூர்ணிமாவிடம் நான் வெளியே போய் என்ன செய்றேன் பாரு என விஷ்ணுவை காட்டி சொல்ல, பூர்ணிமா ஷாக் ஆகி என்ன என கேட்க, உடனே மாயா சுதாரித்துகொண்டு பேச போறேன் என்று சமாளித்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் இதுபோன்று பேசும் இந்த விஷயத்தையாவது கமலஹாசன் கேள்வி கேட்பாரா இல்லை வழக்கம் போல் கேட்கவே மாட்டாரா என கமெண்ட்களை செய்து வருகின்றனர்.

  • cooku with comali season 6 new judge chef koushik இனி இவர்தான் குக் வித் கோமாளி நடுவரா? வீடியோ வெளியிட்டு அதிரடி காட்டிய விஜய் டிவி!