அரசியல் குறியீடுடன் பிக் பாஸ் -7 Promo.. தேதியுடன் வெளியான அறிவிப்பு.. கமல் செய்ததை கவனித்தீர்களா?!

Author: Udayachandran RadhaKrishnan
18 August 2023, 7:42 pm

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஆறு சீசன்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் விரைவில் பிக்பாஸ் தமிழ் சீசன் 7 தொடங்கும் என்று கூறப்பட்டது. அது மட்டும் இன்றி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 7 குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று இரவு 7.7 மணிக்கு விஜய் டிவி அறிவிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தது.

அதன்படி விஜய் டிவி தனது ட்விட்டர் பக்கத்தில் ’இன்று மாலை 7.7 மணிக்கு ரெடியா இருங்கள்’ என்று அறிவித்துள்ளதையடுத்து இந்த 7.7 என்பது பிக் பாஸ் சீசன் 7வது சீசன் என்பதையே குறிக்கிறது என ரசிகர்கள் கண்டுபிடித்தனர்.

தற்போழது அது உண்மையே என்பதை உறுதி செய்ய ப்ரோமோ வெளியாகியுள்ளது. வித்தியாசமாக உள்ள அந்த ப்ரோமோவில் கமல்ஹாசன், சூரியன் என குறியீடு வந்ததுள்ளதால் அரசியல் கலந்து பிக் பாஸ் 7 உள்ளதே என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

அரசியல் குறியீடுடன் கமல்ஹாசன்… தேதியுடன் வெளியான பிக் பாஸ் சீசன் 7 Promo…!!

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி