அவ்வளவு டீலிங் பேசியும் பிரயோஜனம் இல்ல.. பிக் பாஸில் இந்த வாரம் வெளியேற போவது இவரா?

Author: Vignesh
2 December 2023, 4:38 pm

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ தமிழில் இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளது கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சிக்கு பெருவாரியான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, 7வது சீசன் பரபரப்பாக சென்றுக்கொண்டிருக்கிறது. இதனிடையே, திடீரென ரெட் கார்ட் மூலமாக பிரதீப் வெளியேற்றப்பட்டது குறித்து சமூக வலைதளங்களில் பெரும் விவாத பொருளாக மாறியது.

bigg boss 7 tamil-updatenews360

இதற்கு முன் எந்த சீசனிலும் இதே போன்று விதிகள் மீறப்பட்டதில்லை. ஒரு பக்கம் மாயா மற்றும் பூர்ணிமா விதிகளை மீறினால் மற்றொரு பக்கம் அர்ச்சனா மற்றும் விசித்ரா விதிகளை மீறி வருகின்றனர். இது ஒரு பக்கம் என்றால் தறைக்குறைவான வார்த்தைகளை பேசிக் கொள்வது என்பது தொடர்ந்து பிக் பாஸ் வீட்டுக்குள் நடந்து வருகிறது.

இந்தநிலையில், பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் யார் வெளியேறுவார் என்ற ஆர்வம் ரசிகர்களிடையே அதிகரித்து வருகிறது. இந்த வாரத்தில் சரவண விக்ரம், பூர்ணிமா, மணிச்சந்திரா, கூல் சுரேஷ், ஜோவிகா, விஜயகுமார், விசித்ரா, அனன்யா ராவ் மற்றும் தினேஷ் ஆகியோர் நாமிநேஷனில் உள்ளனர்.

bigg boss 7 tamil-updatenews360

ஆரம்பத்தில் இருந்து விசித்ராவிற்கான வாக்கு அதிகமாக இருக்கிறது. தற்போது தினேஷ் சிறப்பாக விளையாடி வருகிறார். இதற்கிடையில், ஸ்கூல் சுரேஷ், விக்ரம் மற்றும் ஜோவிகா இடையே வாக்குகள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த வாரம் ஜோவிகா அல்லது விக்ரம் இரண்டு பேரில் ஒருவர் வெளியேற்றப்படுவார் என்று மக்களால் எதிர்பார்க்கப்படுகிறது. மற்றொரு தரப்பு ஜோவிகாவிற்காக வனிதா விஜய் டிவியிடம் டீலிங் பேசி இருப்பதாகவும் தெரிவித்து வருகின்றனர். ஆனால், சிலர் இந்த வாரம் ஜோவிகா தான் வெளியேற்றப்பட்டுள்ளார் என்று பதிவிட்டுள்ளனர்.

  • Yuzvendra Chahal and Dhanashree relationship நடிகையை விவாகரத்து செய்ய போகிறாரா பிரபல கிரிக்கெட் வீரர்..இணையத்தில் தீயாய் பரவும் தகவல்..!
  • Views: - 294

    0

    0