400×4=800.. நல்ல வேலை ஜோவிகா கணக்கு போட்ட லட்சணத்தை விசித்ரா பார்க்கல… கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்..!
Author: Vignesh13 October 2023, 2:54 pm
பிக்பாஸ் சீசன் 7 படு ஜோராக துவங்கி பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இதில் வனிதா மகள் ஜோவிகாவுக்கு ஆரம்பம் முதல் மக்களின் பேராதரவு கிடைத்து வருகிறது. பார்ப்பதற்கு மிகவும் அழகாக, அம்மாவையே போன்றே தெளிவாக, புத்திசாலித்தனமாக இருப்பதாக பலர் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், தனக்கு படிப்பு வரவில்லை என்பதால், ஒன்பதாம் வகுப்பு வரை படித்தேன். பின்னர் நின்று விட்டேன் என ஜோதிகா தெரிவித்துள்ளார். நடிப்பில் ஆர்வம் இருந்ததால் டிப்ளமோ படித்து முடித்து இருக்கிறேன் எனவும் தெரிவித்திருக்கிறார். பன்னிரண்டாம் வகுப்பு வரைவது படி என விசித்ரா உள்ளிட்ட மற்ற பிக் பாஸ் போட்டியாளர்கள் அட்வைஸ் கொடுத்த நிலையில், இதைப் பற்றி மற்றவர்கள் பேச நான் விரும்பவில்லை என ஜோவிகா ஸ்ட்ரிக்டாக கூறிவிட்டார்.
இதனிடையே, மீண்டும் படிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், அவரின் சரியான வயது கூட இது என விசித்ரா தெரிவித்திருந்தார். படிக்க வேண்டும் என கூறியதற்கு சும்மா பட்டாசு போல் வெடித்தது அனைவரும் அறிந்ததே. விசித்ராவின் வயசுக்கு கூட மரியாதை இல்லாமல் பேசியது பரபரப்பாக பார்க்கப்பட்டது.
அதனை தொடர்ந்து, கமலஹாசன் படிக்க வேண்டும் என்கிற விதி இருக்கலாம் ஆனால், கல்வி வதை இருக்க கூடாது என கூறினார். அதே சமயம், படிப்பு என்பது மிகவும் முக்கியமான ஒன்று என்பதை ஆணித்தரமாக தெரிவித்து இருந்தார். இப்படிப்பட்ட நிலையில், கணக்கு போட்ட லட்சணத்தின் வீடியோ ஒன்று தற்போது பிக் பாஸ் ரசிகர்கள் வெளியிட்டு வைரலாக்கி வருகின்றனர்.
அதாவது, ஜோதிகா ஷாப்பிங் செய்யும்போது 400×4= எவ்வளவு என யோசிக்க அங்கு வரும் விஜய் 800 என்று கூறுகிறார். இதற்கு, ஜோதிகாவுக்கு கணக்கு தெரியாததால் அவர் ஏதும் சொல்லவில்லை. இந்த வீடியோவை வெளியிட்டு நல்ல வேலை இதை விசித்திரா பார்க்கல என கூறி நெட்டிசன்கள் செமையாக கலாய்த்து வருகிறார்கள். சிலர் இதற்கு தான் படிக்க வேண்டும் எனக் கூறி வருகிறார்கள். மேலும், விஜய் மற்றும் ஜோதிகாவிற்கு அட்வைஸ் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
🤣🤣🤣🤣🤣 #BiggBossTamil7 #BiggBossTamilSeason7 #BiggBoss7tamil #Vichithra #Jovika pic.twitter.com/IvtDpUDsQZ
— Manjula Shanmugam (Pikachu🐥) (@Manjula108978) October 11, 2023