Gold Starல் தினேஷ் வைத்த ட்விஸ்ட்.. கடுப்பான மாயா மற்றும் பூர்ணிமா..!

Author: Vignesh
16 November 2023, 2:22 pm

பிக் பாஸ் 7 சீசன் பற்றி தான் தற்போது பெரிய பேச்சாக சமூக வலைதளங்களில் இருந்து வருகிறது. அதற்கு காரணம் ரெட் கார்டு கொடுக்கப்பட்ட பிரதீப் தான். பிரதீப்பின் வெளியேற்றம் எல்லை மீறி நடந்து கொண்டதாலும், பெண்களுக்கு வீட்டில் அவரால் பாதுகாப்பு இல்லை என்ற காரணத்தாலும் பலர் அளித்த புகாரின் பேரில் வெளியேற்றப்பட்டார். ஒருபுறம் பிரதீப்புக்கு ஆதரவான குரல்களும் சமூக வலைதளங்களில் எழுப்பப்பட்டு வருகிறது.

விசித்ராவை தாக்கி பேசும் அளவிற்கு மாயா கேங்கை கேள்வி கேட்பதில்லை என்று நெட்டிஷன்கள் விமர்சித்து வருகின்றனர். sunday எபிசோடில், கமல் மாயா கேப்டன்சி சரியில்லை என தாக்கி பேசி இருந்தார். அதனால், bully கேங் தற்போது சோகத்தில் இருக்கிறது.

bigg boss 7 tamil-updatenews360

தற்போது,வெளியாகி இருக்கும் பிரமோவில் மணிக்கு அனைவரும் ஒன்றாக முடிவெடுத்து கோல் ஸ்டார் கொடுத்துள்ளது பற்றி மாயா பிராவோவிடம் புலம்பு தீர்த்துள்ளார். இது குறித்த, வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி