இன்னொருத்தனை கிட்ட வச்சு என்னை தோக்கடிக்காதே.. காதல் ஜோடிக்கு இடையே சண்டையை மூட்டிவிட்ட பிக்பாஸ்..!

Author: Vignesh
25 October 2023, 4:23 pm

இந்திய தொலைக்காட்சிகளில் பல மொழிகளில் பரவலாக ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ தமிழில் இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளது கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சிக்கு பெருவாரியான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, அடுத்த சீசனாக பிக்பாஸ் 7 நிகழ்ச்சி துவங்கி உள்ளது.

இந்த சீசனில் கூல் சுரேஷ், அக்‌ஷயா உதயகுமார், ஐஷூ, விஜய் வர்மா, ஜோவிகா விஜயகுமார், பிரதீப் ஆண்டனி, பவா செல்லதுரை, விஷ்ணு விஜய்,அனன்யா ராவ், பூர்ணிமா ரவி, சரவண விக்ரம், வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், மாயா கிருஷ்ணா, விசித்ரா, நிக்ஸன், மணி சந்திரா, ரவீனா தாஹா என மொத்தம் 18 பேர் போட்டியாளர்களாக பங்கேற்று உள்ளனர்.

இந்த சீசனில் வெகு சீக்கிரத்தில் போட்டியாளர்களுக்கிடையே போட்டியும், மோதலும் உருவாகிவிட்டது. இதில் அனன்யா பாண்டே எலிமினேட் செய்யப்பட்டார். பவா செல்லத்துரை போட்டியில் இருந்து விலகிவிட்டார். அவரைத் தொடர்ந்து விஜய்யும் எலிமினேட் செய்யப்பட்டார்.

raveena daha - updatenews360

பிக் பாஸ் நிகழ்ச்சியில் காதல் ஜோடிகளாக வலம் வருபவர்கள் தான் மணி ரவீனா இவர்கள் இருவரும் சேர்ந்து கேம் விளையாடுகிறார்கள். தனித் தன்மை இல்லை என்று பல விமர்சனங்கள் எழுந்து வருகிறது. மணி ரவினா ஒரே வீட்டில் இருந்தால் சரி வராது என்று இருவரையும் தனித்தனி வீட்டில் இந்த வார கேப்டன் பூர்ணிமா போட்டுள்ளார். தற்போது பிக் பாஸ் கொடுத்த டாஸ்க் மணி ரவினா இடையே மோதல் வெடித்துள்ளது. தற்போது, அந்த வீடியோ வெளியாகி இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!