மாயா VS அர்ச்சனா.. 50 லட்சத்தை தட்டி செல்லப்போகும் பிக் பாஸ் 7 டைட்டில் வின்னர் இவங்க தான்?..

Author: Vignesh
13 January 2024, 3:33 pm

இந்திய தொலைக்காட்சிகளில் பல மொழிகளில் பரவலாக ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ தமிழில் இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளது கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சிக்கு பெருவாரியான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, அடுத்த சீசனாக பிக்பாஸ் 7 நிகழ்ச்சி துவங்கி உள்ளது.

இந்தநிலையில், பிக் பாஸ் சீசன் 7 ல் கடந்த 80 நாட்களை தாண்டி வெற்றி கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால், இதுவரை இந்த சீசனில் யார் டைட்டிலை வெல்வார் என்ற கணிப்பு ரசிகர்களால் யூகிக்க முடியவில்லை. காரணம் ஒருவரின் ஆட்டமும் ரசிகர்களை கவர்ந்தது போல் இல்லை என்பதுதான்.

bigg boss 7 tamil-updatenews360

சமீபத்தில், எலிமினேட்டான போட்டியாளர்கள் எல்லோரும் பிக் பாஸ் வீட்டில் ஒன்று கூடி உள்ளனர். அதிலும், மாயாவை எல்லோரும் புகழ்ந்து தள்ளிவிட்டு அர்ச்சனாவை bully செய்தும் இருந்தனர். இந்த சீசன் முழுக்க முழுக்க மாயாவுக்கு கமலஹாசன் ஆதரவு இருந்து வந்ததாக சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்பட்டது.

bigg boss 7 tamil-updatenews360

ஒரு கட்டத்தில் மாயாதான் பிக் பாஸ் டைட்டிலை ஜெயிக்கப் போகிறார் என்ற தகவலும் வெளிவந்து கொண்டுதான் இருந்தது. இந்நிலையில், அர்ச்சனா அதிக வாக்குகள் பெற்று முன்னணியில் இருக்கிறார். தற்போது, இரண்டாம் இடத்தில் மாயா பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இரண்டாம் இடத்தை மணி பிடித்துள்ளார்.

  • A man fraud in the name of Sunny Leone சன்னி லியோன் பெயரில் இப்படி ஒரு மோசடியா? அதிர்ந்த அரசு!
  • Views: - 387

    0

    0