காதல் கன்டென்டால் கடுப்பான ரசிகர்கள்: Bigg Boss ல் இந்த வாரம் வெளியேறப்போவது இவருதான்: அப்போ அவரு எஸ்கேப்பா.?

Author: Vignesh
4 November 2023, 11:59 am

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ தமிழில் இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளது கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சிக்கு பெருவாரியான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, 7வது சீசன் பரபரப்பாக சென்றுக்கொண்டிருக்கிறது.

இதனிடையே, முதல் நாளில் இருந்தே பிக் பாஸில் நிறைய டாஸ்க் கொடுத்து போட்டியாளர்களை வறுத்தெடுத்து வருகிறார்கள். இந்த சீசன் விறுவிறுப்பின் உச்சமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, முன்பு எப்போதும் இல்லாத வகையில் சண்டை சச்சரவு பிரச்சனைகள் எல்லாம் இந்த சீசனில் எல்லை மீறி தான் சென்று கொண்டிருக்கிறது.

bigg boss 7 tamil-updatenews360

இந்த சீசனில் வெகு சீக்கிரத்தில் போட்டியாளர்களுக்கிடையே போட்டியும், மோதலும் உருவாகிவிட்டது. இதில் அனன்யா பாண்டே எலிமினேட் செய்யப்பட்டார். பவா செல்லத்துரை போட்டியில் இருந்து விலகிவிட்டார். அவரைத் தொடர்ந்து விஜய், யுகேந்திரன் , வினுஷா ஆகோயோர் எலிமினேட் செய்யப்பட்டார்.

அதன் பின்னர் மேடை பேச்சாளரான கோவில்பட்டி அன்னபாரதி, ரேடியோ ஜாக்கி பிராவொ, சின்னத்திரை நாயகி ரக்‌ஷித்தாவின் முன்னாள் கணவர் தினேஷ் உள்ளிட்டோர் பிக்பாஸ் போட்டியில் வைல்டு கார்டு மூலம் நுழைந்துள்ளார்.

bigg boss 7 tamil-updatenews360

இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி இந்த வார பிக் பாஸில் இருந்து வெளியேறப் போவது யார் என்பது குறித்து ஓட்டிங் ரிசல்ட் வெளியாகியுள்ளது. அதன்படி, ரேடியோ ஜாக்கி பிராவொ மற்றும் அன்னபாதி, ஐஷு தான் மக்களிடமிருந்து குறைவான வாக்குகளை பெற்றுள்ளனர். இதன் அடிப்படையில், இவர்கள் மூவரில் ஒருவர் தான் இந்த வாரம் வெளியேறுவார்கள் என்று தெரிகிறது. அதிலும், அன்னபாதி, ஐஷு வெளியேற அதிக வாய்ப்புகள் என்கின்றார்கள்.

  • kamal haasan ott streaming after 8 weeks கமல்ஹாசன் செய்த திடீர் புரட்சி! ஓடிடி விநியோகத்தையே தலைகீழாக புரட்டிப்போட்ட சம்பவம்?