ஆடியன்ஸ் எல்லோரும் ஹேப்பி அண்ணாச்சி… பிக்பாஸ் 7 டைட்டில் வின்னர் இவர் தான்!
Author: Rajesh13 January 2024, 9:13 pm
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 7 சீசன் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் வெற்றிகரமாக ஓடி வருகிறது. 23 போட்டியாளர்களை கொண்டு துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது. இதில் கடைசி வாரம் விஜய் வர்மா, தினேஷ், விஷ்ணு, மாயா, மணி, அர்ச்சனா என மொத்தம் ஆறு பேர் இறுதிச்சுற்றில் இருந்தனர்.
இந்த நிலையில் கடைசி நிமிடத்தில் மிட் வீக் எவிக்ஷன் மூலமாக விஜய் வர்மா எலிமினேட் ஆனார். இந்த போட்டியில் யார் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளாரோ அவர் தான் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் வெற்றியாளர் ஆவார்.
அந்தவகையில் சற்றுமுன் கிடைத்த தகவலின் படி நாம் அனைவரும் எதிர்பார்த்தபடி இந்த சீசனின் வெற்றியாளராக அர்ச்சனா டைட்டில் தட்டி சென்றுள்ளார். மேலும் இரண்டாவது இடம் மணி சந்திராவுக்கும், மூன்றாவது இடத்தை மாயாவும் பிடித்து இருப்பதாக நம்ப தகுந்த வட்டாரத்தில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளது. இது பிக்பாஸ் ஆடியன்ஸ் எல்லோரையும் குதூகலப்படுத்தியுள்ளது.