ரவீனாவை கூப்பிட்டு வச்சு பேசாதே.. வீட்டிற்கு வந்து மணியை திட்டிதீர்த்த அவரது அக்கா..! (வீடியோ)
Author: Vignesh21 December 2023, 11:15 am
பிக் பாஸ் சீசன் 7 ல் கடந்த 80 நாட்களை தாண்டி வெற்றி கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால், இதுவரை இந்த சீசனில் யார் டைட்டிலை வெல்வார் என்ற கணிப்பு ரசிகர்களால் யூகிக்க முடியவில்லை.
காரணம் ஒருவரின் ஆட்டமும் ரசிகர்களை கவர்ந்தது போல் இல்லை என்பதுதான். தற்போது, பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களின் உறவினர்கள் வருகிறார்கள். ஃப்ரீஸ் டாக்ஸ் நடைபெற்று வருகிறது.
எல்லா போட்டியாளர்களின் உறவினர்களும் வந்து கொண்டே இருக்கிறார்கள். இன்றைய பிக் பாஸ் முதல் பிரமோவில் ரவீனாவின் சகோதரி மற்றும் சகோதரர் வந்துள்ளனர். இவர்கள் வீட்டிற்கு வந்து ரவீனாவை என்ன விளையாட்டு விளையாடுகிறாய் என்று செமையாக திட்டுகிறார். அதோடு, மணியை எச்சரிக்கும் விதமாக பேசியது ரசிகர்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.