காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு சரண்டர் ஆன போட்டியாளர்.. பிக்பாஸ் 7 அதிரடி Promo ..!
Author: Vignesh5 January 2024, 10:32 am
இந்திய தொலைக்காட்சிகளில் பல மொழிகளில் பரவலாக ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ தமிழில் இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளது கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சிக்கு பெருவாரியான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, அடுத்த சீசனாக பிக்பாஸ் 7 நிகழ்ச்சி துவங்கி உள்ளது.
இந்த சீசனில் தான் முதல்முறையாக பிக் பாஸ், ஸ்மால் பாஸ் என இரண்டு வீடுகள் இடம்பெற்றுள்ள நிலையில், இரண்டாவது வீடு சிறைச்சாலை போன்ற விதிகளுடன் இயங்க தொடங்கியுள்ளது.
இந்தநிலையில், பிக் பாஸ் சீசன் 7 ல் கடந்த 80 நாட்களை தாண்டி வெற்றி கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால், இதுவரை இந்த சீசனில் யார் டைட்டிலை வெல்வார் என்ற கணிப்பு ரசிகர்களால் யூகிக்க முடியவில்லை. காரணம் ஒருவரின் ஆட்டமும் ரசிகர்களை கவர்ந்தது போல் இல்லை என்பதுதான்.
தற்போது, நடைபெற்று வரும் பிக்பாஸ் 7 இல் உள்ள சில போட்டியாளர்கள் பணப்பெட்டியுடன் வீட்டை விட்டு வெளியேறத் திட்டம் போட்டு வைத்து விட்டனர். விசித்ரா, மாயா, மணி ஆகிய நபர்களில் ஒருவர்தான் பணப்பெட்டியுடன் வீட்டில் இருந்து வெளியேறப் போகிறார்கள் என கூறப்பட்டது.
இன்றைய பிரமோ வீடியோவில் 16 லட்சம் மதிப்பில் பணப்பெட்டி காட்டப்பட்டது. வந்த தகவலின் படி பூர்ணிமா 16 லட்சம் மதிப்புள்ள பணபெட்டியை எடுத்துக்கொண்டு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறாராம்.
அதோடு, தான் இதுவரை யாரையாவது கஷ்டப்படுத்தினால் மன்னித்து விடுங்கள் என போட்டியாளர்கள் முன்பு விழுந்து மன்னிப்பு கேட்டுள்ளார். இதனைப் பார்த்து ரசிகர்கள் பண்றதெல்லாம் பண்ணிட்டு ஒன்னும் தெரியாத பிள்ளை மாதிரி மன்னிப்பு வேற கேக்குறியா வெளியில வா உனக்கு இருக்கு என்று கமெண்ட்களை செய்து வருகின்றனர். சிலரோ பூர்ணிமாவின் இந்த முடிவு நல்லது என்று தெரிவித்து வருகிறார்கள். மேலும், இந்த வாரம் பூர்ணிமா தான் வெளியேற இருப்பதாகவும், தகவல்கள் வெளியான நிலையில், அவர் புத்திசாலித்தனமாக நடந்து கொண்டார் என்று வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.