முதல் வாரத்திலேயே நாமினேட் ஆன மகள்.. ஜோவிகா குறித்து வனிதா அதிரடியாக சொன்ன கமெண்ட்..!

Author: Vignesh
3 October 2023, 11:15 am

பிக்பாஸ் சீசன் 7 படு ஜோராக துவங்கி பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இதில் வனிதா மகள் ஜோவிகாவுக்கு ஆரம்பம் முதல் மக்களின் பேராதரவு கிடைத்து வருகிறது. பார்ப்பதற்கு மிகவும் அழகாக, அம்மாவையே போன்றே தெளிவாக, புத்திசாலித்தனமாக இருப்பதாக பலர் கூறி வருகின்றனர்.

ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில் இன்று முதல் வாரத்திற்கான நாமினேஷனில் ஜோவிகா அதிக ஓட்டுகள் பெற்று முதல் இடத்தில் இருக்கிறார். இரண்டு வீட்டில் இருக்கும் போட்டியாளர்களும் மற்ற வீட்டில் இருக்கும் போட்டியாளர்களை நாமினேட் செய்ய வேண்டும் என பிக்பாஸ் சொல்ல அதில் அதிகபட்சமாக 4 பேர் வனிதா விஜயகுமார் மகள் ஜோவிகாவை தான் நாமினேட் செய்து இருந்தனர்.

அவருடன் யுகேந்திரனுக்கு 3 ஓட்டு மற்றும் பிரதீப்புக்கு 3 ஓட்டு விழுந்ததால் அவர்களும் நாமினேட் ஆகி உள்ளனர். மேலும் பவா செல்லத்துரை, ஐஷு, அனன்யா, ரவீனா உள்ளிட்டோர் அடங்கும். இது ஒரு விதத்தில் ஜோவிகாவுக்கு ப்ளஸ் பாயிண்ட் என்றே கூறலாம், சர்ச்சைக்கும், விமர்சனத்திற்கும் மத்தியில் யார் அதிகம் கார்னர் செய்யப்படுகிறாரோ அவருக்கு தான் அதிகம் பப்ளிசிட்டி கிடைக்கும். எனவே அதன்மூலம் அந்த நபரின் நாள் ஒன்றின் சம்பளமும் அதிகரிக்கும். இதனால் ஜோவிகா சரியான பாதையில் தான் செல்கிறார் என்பது பலரது கருத்தாக இருக்கிறது.

vanitha_updatenews360

இந்நிலையில், வனிதாவின் மகள் நாமினேட் ஆனது பற்றி ஒரு பதிவை போட்டிருக்கிறார். “உன்னை நினைத்து பெருமையாக இருக்கிறது பேபி” என வனிதா குறிப்பிட்டு இருக்கிறார்.

vanitha_updatenews360
  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ