பூர்ணிமா உடன் காதல்? சீக்ரெட்டை வெளியிட்ட விஷ்ணு; இத நாங்க எதிர்பார்க்கவே இல்லை..!
Author: Vignesh24 January 2024, 9:49 am
பிக் பாஸ் ஷோ வில் போட்டியாளர்கள் காதல் வசப்படுவது வழக்கமான ஒன்றுதான். சில போட்டியாளர்கள் காதலை வெளிப்படையாக பேசினாலும், ஒரு சிலரோ அதை கேமரா முன்பு சொல்லாமல் அது வெறும் பிரண்ட்ஷிப் என்று மட்டும் சொல்லிக்கொண்டு சமாளிப்பதும் உண்டு. அப்படித்தான் சமீபத்தில் நிறைவடைந்த பிக்பாஸில் ஏழாம் சீசனில் பூர்ணிமா மற்றும் விஷ்ணு இருவரும் நெருக்கம் காட்டினார்கள்.
மற்ற போட்டியாளர்கள் அது காதல் தான் எனக் கூறினாலும், அவர்கள் இருவரும் அதை ஒத்துக் கொள்ளவில்லை. பிக் பாஸ்க்கு பிறகு வெளியேறிய விஷ்ணு தற்போது, பேட்டி அளித்து வருகிறார். அதில், பூர்ணிமாவுடன் இருந்தது காதலா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில், அளித்தவர் எங்களுக்கு நடுவில் ஒரு பான்டிங் இருந்தது. அவர் கேமராவிற்காக பல விஷயங்களை செய்தார். அவரை, நம்பலாமா என எனக்கே சந்தேகம் வந்தது. அதைப்பற்றி நானும் வெளிப்படையாக கேட்டுவிட்டேன். ஏதாவது ஃபீலிங் இருக்கிறதா என நான் கேட்டேன். அதற்கு அவர் எதுவும் சொல்லவில்லை அதனால் விட்டு விட்டேன் என்ற விஷ்ணு கூலாக பதில் அளித்துள்ளார்.